Search

Saturday, May 31, 2014

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நடிகை மோனிக்கா - ரஹிமா என பெயர் மாற்றம் (வீடியோ இணைப்பு)

 
 
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவர் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மோனிகா என பெயர் கொண்ட இவர் தற்போது எம்.ஜி.ரஹிமா என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார். 

பெயரை மாற்றிக் கொண்டது பற்றி இவர் கூறியதாவது:-

நான் இஸ்லாம் மதத்தை 2010-ல் இருந்தே பின்பற்றுகிறேன். எனது தந்தை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். என் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர். நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். நான் மதம் மாறுவதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த என் பெற்றோர்கள் பிறகு சம்மதித்தனர். 

நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாக இருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன். இது எனக்கு சவுகரியமாகவும் சுதந்திரமாகவும் இருந்தது. அதன்பிறகு பர்தா அணிவதால் இஸ்லாம் மதத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன். இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் யாருடைய கட்டாயத்திற்காகவும் மாறவில்லை. என்னுடைய முழு சம்மதத்தோடு மாறியுள்ளேன். கைவசம் படங்கள் உள்ளன. அதை முடித்து விட்டு சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். எனது பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.youtube.com/watch?v=zh4doTCki0Y
 
 

லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்


நீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்பீர்கள். ஓபன் சோர்ஸ் என்ப்படும் திறவு மூலம் இயக்கத்தின் நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கும் லின்க்ஸ் பரவலாக கருதப்படுவது போல ஏதோ மாற்று ஆப்பரேட்டிங் சிஸ்டமோ அல்லது விண்டோஸ் பிடிக்காத தொழில்நுட்ப பித்தர்கள் பயன்படுத்துவது என்றோ நினைத்து விட வேண்டாம்.

ஒரு இயங்கு தளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) லினக்ஸ் நாம் நினைத்துக்கொண்டிருப்பதை எல்லாம் விட பிரபலமாகவும் பரவலாகவும் இருக்கிறது. உண்மையில் எங்கும் லினக்ஸ் எதிலும் லினக்ஸ் என்று சொல்லக்கூடிய வகையில் லின்கஸ் பயன்பாடு இருப்பதை தொழில்நுட்ப தளமான மேக் யூஸ் ஆப் , கட்டுரை அழகாக உணர்த்துகிறது. சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதல் கூகுலின் தானியங்கி கார் வரை எல்லாவற்றிலும் லினக்ஸ் பயன்படுத்தப்படுத்தப்படுதவதாக இந்த கட்டுரை உணர்த்துகிறது.
லின்கஸ் பற்றி நீங்கள் அறிந்திறாத பத்து விஷயங்கள் எனும் தலைப்பிலான் இந்த கட்டுரை , உங்களுக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் ,லினக்ஸ் எங்கும் இருக்கிறது என்கிறது. ஓபன் சோர்ஸ் என்பதால் வளைந்து கொடுக்க கூடியது, எந்த அமைப்பிற்கும் மாற்றக்கூடியது மற்றும் எந்த ஹார்ட்வேரிலும் செயல்படக்கூடியது ஆகியவற்றை லின்கசின் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மைக்கான காரணங்களாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் லினக்ஸ் இலவசமானது.
சரி லினக்ஸ் அப்படி எங்கெல்லாம் பயன்படுகிறது ? பார்க்கலாம்;


சூப்பர் கம்ப்யூட்டர்கள்

சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் உலகின் அதிவேக கப்யூட்டர்கள் பற்றி அடிக்கட்டி கேள்விபட்டிருக்கிறீர்கள் இல்லையா? நம்பர் ஓன் அந்தஸ்து மாறுவது போல ,சூப்பர் கம்ப்யூட்டரும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்? இவ்வளவு ஏன் ? உலகின் முன்னணி 500 சூப்பர் கம்ப்யூட்டர்களை பட்டியலிடுவதற்கு என்றே ஒரு இணையதளம் இருக்கிறது ( http://www.top500.org/). அதைவிட முக்கியம் இவற்றில் பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் லினக்சில் தான் இயங்குகின்றன. 2013 நவம்பரில் வெளியான சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியல்படி உலகின் 482 முன்னணி சூப்பர் கம்ப்யூட்டர்களை லின்கஸ் சார்ந்தவை. சதவீதப்படி இது 96.4 சதவீதம்! இந்த பட்டயலில் விண்டோசுக்கு கொஞ்சுண்டு இடம் தான். நாமெல்லாம் , டெஸ்க்டாப்பில் லின்க்ஸ் பயன்படுத்தவோ யோசித்துக்கொண்டிருக்கிறோம் ,ஆனால் சூப்பர் கம்ப்யூட்டர்களே லின்க்சை தான் நம்புகின்றன பாருங்கள்!


விமானங்களில்

விமான பயணங்களில் டிவி பார்க்கவும் திரைப்படங்களை கண்டு ரசிக்கவும் வசதி இருக்கிறது . இணையததையும் பயன்படுத்த்லாம், வீடியோ கேம் ஆடலாம். இவற்றுக்கெல்லாம் எது அடிப்படை என்று நினைக்கிறீர்கள்? லினக்ஸ் தான். லின்கஸ் சுலபமானது மற்றும் இலவசமானது என்பதால் விமான சேவை நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற அமைப்புகளை உருவாக்கி கொள்ளலாம் என்பதால் ஆகாயத்தில் லின்க்ஸ் கோலோச்சுகிறது. யுனைடெட்,ஏர் டெல்டா, வர்ஜின் என எல்லா விமான சேவை நிறுவனங்களும் லின்க்சை தான் பயன்படுத்துகின்றன.


ஸ்மார்ட் பிரிட்ஜ்

போனில் இருந்து வாட்ச், டி.வி  என எல்லாமே ஸ்மார்ட் ஆகி கொண்டிருக்கும் காலம் இது. பிரிட்ஜிலும் கூட ஸ்மார்ட் பிரிட்ஜ் வந்துவிட்டது. ஸ்மார்ட் பிரிட்ஜ் என்றால் இணைய வசதி கொண்ட பிரிட்ஜ்!. கொஞ்சம் பழைய கருத்தாக்கம் என்றாலும் இப்போது தான் பிரபலமாக துவங்கியிருக்கிறது. சாம்சங் உள்ளிட்ட பலநிறுவனங்கள் இந்த பிரிவில் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. எலக்ட்ரோலெக்ஸ் நிறுவனம் பிரேசிலில் ஐ-கிட்சன் எனும் ஸ்மார்ட் பிரிட்ஜை அறிமுகம் செய்துள்ளது .இணைய வசதி மற்றும் பல்வேறு செயலிகள் இயங்க கூடிய இந்த பிரிட்ஜ் லின்கசால் இயங்குகிறது. ஸ்மார்ட் பிரிட்ஜ் மட்டும் அல்ல, தெர்மோஸ்டாட் எனப்படும் பருவநிலையை கண்காணிக்கும் தொழில்நுட்ப சாதனமும் லினக்சால் தான் இயங்கிறது.



ஸ்மார்ட் துப்பாக்கி

இலக்கை குறி வைப்பது, சரியாக குறி வைத்தவுடன் சுடுவது என வியக்க வைக்கும் ஸ்மார்ட் துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் லினக்ஸ் சார்ந்தது தான். அமெரிக்காவின் ஆஸ்டினை சேர்ந்த டிராகிங் பாயிண்ட் எனும் நிறுவனம் இந்த துப்பாக்கியை உருவாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி செயல்படும் விதம் பற்றி சுவையான தகவல்கள் இங்கே; http://arstechnica.com/gadgets/2013/01/17000-linux-powered-rifle-brings-auto-aim-to-the-real-world/


தானியங்கி கார்கள்

தேடியந்திர நிறுவனமான கூகுல் சமீபத்தில் தானியங்கி கார் மாதிரியை அறிமுகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கால போக்குவரத்துக்கான முதல் படியாக இது கருதப்படுகிறது. இப்போதைக்கும் பல வரம்புகள் இருந்தாலும் வருங்காலத்தில் பொது போக்குவரத்தையே தானியங்கி கார்கள் மாற்ற்போகின்றன. கூகுல் மட்டும் அல்ல கார் தயாரிப்பு நிறுவனங்களும் தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. சமீபத்திய செய்தி இண்டெல் நிறுவத்தத்திற்கும் தானியங்கி கார் திட்டம் இருப்பது.

இதே போல விமான கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பசுக்களிடம் பால் கறப்பதற்கான தானியங்கி முறையும் லினக்சை தான் சார்ந்துள்ளன. ஆக, லின்கசுக்கு ஜே. முடிந்தால் உங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில்ம் லின்கஸ் மாற்றத்தை கொண்டு வாருங்கள்!

Wednesday, May 28, 2014

இணைய வங்கிப் பாவனையாளர்கள் அவதானமாக செயற்படுங்கள்: பொலிஸ் அறிவுறுத்தல்!


இணையக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 
குறிப்பாக, இணையத்தின் ஊடாக வங்கி சேவைகளைப் பயன்படுத்துவோர் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறும், இணையப் பாவனைக்கென தனியான சிம் அட்டையினை பயன்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இணைய வங்கிச் சேவைகளை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் குறித்த இணையத்தளங்களின் உண்மைத் தன்மையினை இனங்காணுவது அவசியம். வங்கிகளின் இணையத்தளங்கள் என சில போலியான இணையத்தள முகவரிகள் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

வங்கி கணக்கு விபரங்கள், கடவுச்சொல் விபரங்கள், மற்றும் தனிப்பட்ட விபரங்களை கோரி வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம். குறித்த வங்கிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வங்கி சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

இணைய குற்றங்களை கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள புலனாய்வு துறையினரின் சிறப்புப் பிரிவிற்கு, சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 235 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த முறைப்பாடுகளில் இணைய வங்கி தொடர்பில் 9 முறைப்பாடுகளும், மின்னஞ்சல் தொடர்பாக 34 முறைப்பாடுகளும் அடங்குவதாக அஜித் ரோஹண மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Saturday, May 24, 2014

மிகப்பெரும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள e bay. (முழு விபரம்)



இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதில் இணைய உலகம் போட்டி போட்டிக்கொண்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் உலகம் முழுவதும் சுமார் 233 மில்லியன் வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்ட அமெரிக்காவை தலைமையாகக்கொண்டு இயங்கும் இணையத்தின் மூலம் மிக விரைவாகவும் , பாதுகாப்பாகவும் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் கொள்முதல் செய்தல் போன்ற வர்த்தகத்திற்கு உலகிலேயே முன்னணியாக திகழ்ந்து வரும் “ஈபே ” யின் இணையத்தளம் இரு வாரங்களுக்கு முன்னர் மிக மோசமான முறையில் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

மிகப்பெரும் சைபர் தாக்குதலாகக் கருதப்படும் இந்த தகவல் திருட்டினையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கடவுச்சொல்லை மாற்றுமாறு ஈபே நிறுவனம் கேட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் சுய தரவுகள் மீது இரு வாரங்களுக்கு முன்னர் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளபோதிலும் வணிகத் தகவல்களை ஹெக்கர்களால் நெருங்க முடியவில்லை என ஈபே நிறுவனம் கூறியுள்ளது.

Wednesday, May 21, 2014

FBI மற்றும் சர்வதேச காவற் துறையினரால் கணனி ஹேக்கர்கள் வேட்டை தொடக்கம்:90 பேர் கைது


உலகம் முழுதும் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் மிக நூதனமாக கணணி ஹேக் செய்யும் திறமைசாலிகளால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் FBI புலனாய்வு அமைப்பு மற்றும் சர்வதேச போலிசார் இணைந்து மிகப் பெரும் தேடுதல் வேட்டை செய்து சுமார் 19 நாடுகளில் இருந்து 90 பேர் வரை கைது செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவின் பருவ வயது உலக அழகியான கஸ்ஸிடி வோல்ஃப் உம் கைதானவர்களில் ஒருவர் என்பதுடன் Blackshades எனும் malware இன் மூலம் ஹேக்கிங் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கைது நடவடிக்கை பற்றி அமெரிக்க சட்ட வல்லுனர் ப்ரீட் பராரா கூறுகையில், 'உலகம் முழுதும் இந்த Hacking எனும் Cyber crime இனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இதனால் சுமார் 2 வருடங்களாகத் தொடர்ச்சியாக கண்காணித்து இக்கைது நடவடிக்கை மேற்கொண்டோம். இதனால குற்றவாளிகள் தமது சான்றுகளை அழிப்பதற்கான அவகாசம் கிடைத்திருக்காது.' என்றார். கடந்த வாரம் ஹேக்கர்களால் உபயோகிக்கப் படும் இணைய கருத்துக் கணிப்பு தளத்தினை குறி வைத்து இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டது.

மேலும் FBI மற்றும் பராராவின் கூற்றுப் படி குற்றவாளிகள் Blackshades இனை வங்கிக் கொள்ளை போன்ற அனைத்து நாச வேலைகளுக்கும் உபயோகித்து வந்ததாகவும் கடந்த சில வருடங்களாக உலகில் சைபர் கிரைமை அரங்கேற்ற மிகப் பிரசித்தமான RAT எனும் செயலியாக இது இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை சீன அரசு தனது 5 PLA இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா சுமத்திய ஹேக்கிங் குற்றச்சாட்டு மற்றும் தண்டனை விதித்தலை ஏற்க மறுத்துள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு சைபர் தொழிநுட்பத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சியையும் ரத்து செய்துள்ளது.

Monday, May 19, 2014

'RajiniLang' மென்பொருள் நிரலாக்கத்தில் (Programming) கால் பதிக்கும் ரஜினிகாந்த் பஞ்ச் வசனங்கள்


நீங்கள் ஓர் தமிழ் சினிமாத் திரைப்பட ரசிகராக இருந்து கொண்டு அதே நேரம் மென்பொருள் நிரலாக்கப் பிரிவில் (Software programming) வல்லுனராகவும் உள்ளீர்களா?
மேலும் programming கட்டளைகளை நினைவில் வைத்துக் கொள்ள கஷ்டப் படுகின்றீர்களா'? உங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் சென்னையைச் சேர்ந்த 4 மென்பொருள் வல்லுனர்கள். அப்படி இவர்கள் என்ன செய்து விட்டார்கள் என எண்ணுகின்றீர்களா?

வேறொன்றுமில்லை. தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் வரும் பஞ்ச் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு ப்ரோகிராமிங் மொழியை இவர்கள் உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த கணிணி மொழிக்கு இவர்கள் RajiniLang எனப் பெயரும் சூட்டியுள்ளனர். கணணி உலகில் மிகப் பிரசித்தமான Toy மொழிகளான Pascal, Treelang மற்றும் Logo இற்கு இணையாக RajniLang உம் களத்தில் குதித்துள்ளது. RajniLang இன் முக்கியமான கட்டளைகள் சூப்பர்ஸ்டாரின் பிரசித்தமான பஞ்ச் வசனங்களைக் கொண்டு ஆக்கப் பட்டிருக்கும்.

RajniLang ஐ உருவாக்கிய மென்பொருள் வல்லுனர்களின் பெயர் முறையே V.கிருஷ்ணன் (22), சதீஷ் பாபுர் (23), கார்த்திக் பாபு (22) மற்றும் கிறிஸ் கௌன்டின்யா (22) ஆகும். குழந்தைகளுக்கும் வளர்ந்தவர்களுக்கும் தகவல் நிரலாக்கத்தை இலகுவாக்கும் RajniLang ஐ உருவாக்கிய இவர்கள் அனைவரும் Freshdesk மென்பொருள் சேவை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மொழி குறித்து கிருஷ்ணன் கருத்துரைக்கையில், 'சாதாரண ப்ரோக்கிராமிங் கட்டளைகள் சிக்கலாகவும் அலுப்புத் தட்டுவதாகவும் இருக்கும். இந்நிலையில் ப்ரோகிராமிங் மொழியை விருப்பத்துக்கு உரிய ஒன்றாகவும் இலகுவாகக் கற்கும் விதத்தில் மாற்றுவது குறித்து சிந்தித்த போதே RajniLang இனை உருவாக்கும் திட்டம் மனதில் தட்டியது' என்றுள்ளார்.

இந்த RajniLang இல் உதாரணமாக தட்டச்சுக் கருவிக்கு (Printer) தட்டச்சு செய்க என்ற கட்டளைக்கு 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கின்றான்!' என்ற வசனமும், கூட்டல் கழித்தல் போன்ற கணிதச் செயற்பாட்டுக்கு, 'கூட்டிக் கழிச்சு பாரு சரியா வரும்!' என்ற வசனமும் 'சக்தி கொடு' என்ற வசனமும் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இதேவேளை RajniLang இனை ஓப்பன் சோர்ஸ் முறையில் உலகம் முழுதும் பரப்ப முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் உலகம் முழுதும் இதற்கு ரஜினி ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டும் உள்ளது. இதற்காக இந்த நால்வர் அடங்கிய குழு இணையத் தளம் ஒன்றை ஸ்தாபிக்கவும் முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 15, 2014

உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானியின் வீடு

உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது.

4 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் 27 மாடிகளை கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான ‘அண்டிலியா’ வின் பெயரை சூட்டியுள்ளார். 

இந்த வீட்டின் மதிப்பு 1 லிருந்து 2 பில்லியன் டாலர் வரை இருக்கும் என ‘போர்ப்ஸ்’ மதிப்பிட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடியாகும்.

27 மாடிகள் கொண்ட அண்டிலியாவில் 6 மாடிகள் கார்பார்க்கிங் வசதிக்காகவும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகர கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அண்டிலியா 8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது.






கொலம்பஸ் பயணித்த சாந்தா மரியா கப்பல் சிதைவுகள் கண்டுபிடிப்பு?


அமெரிக்கக் கண்டத்தைக் கண்டு பிடித்த கப்பலோட்டி கிறிஸ்தோபர் கொலம்பஸ் பயணித்த சாந்தா மரியா என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பாய்மரக் கப்பலின் சிதைவுகள் கண்டு பிடிக்கப் பட்டிருக்கலாம் என உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு ஹைட்டியின் கடற்பகுதியில் கப்பல் பாகம் ஒன்று கொலம்பஸ் பயணித்த தலைமைக் கப்பல் சாந்தா மரியா ஆக இருக்கலாம் என ஒரு ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ள போதும் இக் கப்பல் பாகம் மேலும் பரிசோதிக்கப் பட்ட பின்னரே சாந்த மரியாவா என நிரூபிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

15 ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி 1492 கிறிஸ்துமஸ் தினத்தில் மூழ்கடிக்கப் பட்டதாக வரலாற்றில் கூறப்பட்டிருக்கும் சாந்தா மரியா கப்பலில் ஸ்பெயின் அல்லது போர்த்துக்கல்லில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலைப்படுத்தும் கற்கல் மற்றும் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப் படும் பீரங்கியின் சேதம் ஆகியவை குறித்த கடற் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

தற்போது இதனைக் கண்டுபிடித்த க்லிஃபோர்ட் என்பவர் ஹிஸ்டரி சேனலின் (History) ஆதரவுடன் குறித்த சேதங்கள் கிடைத்த பகுதியைப் பாதுகாக்க ஹைட்டி அரசினை வலியுறுத்தியுள்ளார். இதேவேளை சுமார் 500 வருடங்களாக மரத்தால் செய்யப் பட்ட இக்கப்பலின் பாகங்கள் சேதமடையாது இருப்பது மிக அரிது என்ற கருத்தும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேர்ஸ் அச்சுறுத்தலைத் தடுக்கும் பணி மிக அவசரமானது ஆனால் உலகளாவிய அவசரம் அல்ல!:WHO

மத்திய கிழக்கு நாடுகளிலும் அங்கிருந்து உலகின் சில நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வரும் மேர்ஸ் (MERS) தொற்று நோயைத் தடுக்கும் தேவை மிக அவசரமானது ஆனால் உலகளாவிய சுகாதார அவசரம் அல்ல என உலக சுகாதார அமைப்பான (WHO) தெரிவித்துள்ளது.

இத்தொற்று நோய் ஒரு நபரிடம் இருந்து இன்னொருவருக்கு இலகுவில் தொற்றிக் கொள்வதற்கான அதிகரித்து வரும் சான்றுகள் எதையும் தாம் அறியவில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ள போதும் MERS எக்காரணிகளால் மனிதர்களுக்கிடையே பரவுகின்றது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் MERS வைரஸ் இனால் தாக்கப் பட்டவர்கள் 571 பேர் எனவும் இதில் 171 பேர் பலியாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ள WHO அமைப்பு இந்நோய் பரவி இருக்கும் 18 நாடுகள் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் இதில் இறுதியாக சேர்ந்த நாடு நெதர்லாந்து எனவும் கூறியுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் வாழும் நாடாக சவுதி அரேபியாவும், ஐக்கியா அரபு இராச்சியமும் இனம் காணப் பட்டுள்ளன. மேலும் MERS தொற்று நோய் தாக்கியவர்களில் 30% வீதமானோர் மரணித்துள்ளதாகவும் புள்ளி விபரம் கூறுகின்றது. மனிதனின் சுவாசத் தொகுதியைத் தாக்கி கபவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக் கூடிய மேர்ஸ் தொற்றுநோய்க்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது விசேட சிகிச்சையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளில் விமானத்தில் இருந்து வந்து சுவாசக் கோளாறு மற்றும் நோய் அறிகுறிகளுடன் தென்பட்டால் மத்திய கிழக்கில் இருந்து வந்தவர்களா எனப் பரிசோதிக்கப் பட்ட பின்னரே மெல்ல வெளியே நடமாட அனுமதிக்கும் பணி மெல்ல மெல்ல அமுலுக்கு வந்துள்ளது. முதன் முதல் சீனாவில் 2002 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட மேர்ஸ் வைரஸ் குறுகிய காலத்தில் 800 பேரின் உயிரைக் குடித்து இருந்தது.

Thursday, May 8, 2014

உலகின் அதிக கொள்ளளவுடன் மைக்ரோ எஸ்டிகாட் SanDisk வெளியிட்டது

SanDisk நிறுவனம் 128 ஜிபி கொள்ளளவுடன் மைக்ரோ எஸ்டி ஐ வெளியிட்டுள்ளது.

இதுவரை உலகின் அதிகளவு கொள்ளளவுடன் வெளியிடப்பட்ட மைக்ரோ எஸ் டி காட் இதுவாகும். மேலும் இதனது இந்திய விலை Rs 9999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

128GB SanDisk Ultra microSDXC UHS-I memory card மேமாதம் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு தயாராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வேறெந்த நட்பு நாட்டையும் விட இஸ்ரேல் அமெரிக்காவை அதிக புலனாய்வு!:நியூஸ்வீக்

அமெரிக்காவை வேறெந்த நட்பு நாட்டையும் விட இஸ்ரேல் மிக அதிகமாக புலனாய்வு செய்திருப்பதாகவும் இந்நடவடிக்கைகள் எல்லை மீறி அபாய கட்டத்தை எட்டி விட்டதாகவும் செவ்வாய்க்கிழமை நியூஸ்வீக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் மொஸ்ஸாட் உளவுத் துறையின் அமெரிக்கா மீதான இலக்குகளாக அதன் தொழிற்துறை மற்றும் தொழிநுட்ப ரகசியங்கள் ஆகியவை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதைவிட இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவில் நுழைய விசா எடுப்பதற்கான செயற்பாட்டை சட்ட ரீதியில் இலகுவாக்குவதும் மொஸ்ஸாட்டின் (Mossad) நோக்கம் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க மண்ணில் எமது உளவாளிகளின் புலனாய்வு நடவடிக்கையை தீவிரப் படுத்தியுள்ளோம் என்ற குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆதார பூர்வமற்றவை என புதன்கிழமை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லியெபெர்மான் இராணுவ ரேடியோ அலையில் இக்குற்றச்சாட்டின் அனைத்து பிரிவுகளையும் மறுத்துரைத்துள்ளார்.
நியூஸ்வீக் தனது செய்திக்கு ஆதாரமாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு, மாநிலத் திணைக்களம் மற்றும் FBI ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ளது. 1985 இல் இஸ்ரேலுக்காக அமெரிக்க மண்ணில் உளவு பார்த்த ஜொனாதன் பொல்லார்ட் எனும் அமெரிக்க கப்பற் படை நிபுணரை அமெரிக்கா வாஷிங்டனில் கைது செய்து ஆயுள் தண்டனை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 6, 2014

கத்தாரில் வாகனம் செலுத்துவோருடைய கவனத்திற்கு..!

 
வாகனம் செலுத்திக் கொண்டு கையடக்க தொலைபேசி பயன்படுத்துவோருக்கான தண்டப் பணத்தினை குறைந்தது 3000 கட்டார் முதல் கூடியது 10,000 கட்டார் றியால் வரை அதிகரிப்பதுடன் ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்க கட்டார் அரசு தீர்மானித்துள்ளது.

கட்டார் நாட்டில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் அதிகமானவை கையடக்க தொலைபேசியினை பாவித்துக் கொண்டு வாகனம் செலுத்துவதனாலேயே ஏற்படுவதாக அறியக்கிடைத்ததனைத் தொடர்ந்து இந்தச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. 

அதே வேளையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி , வேறு ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி வாகனம் செலுத்துதல் , மதுபோதையில் வாகனம் செலுத்துதல் , போக்குவரத்து விதிகளுக்கு எதிராக செயற்படுதல் , தேவையற்ற விதத்தில் சத்தம் எழுப்புதல் , சுற்றாடலை மாசுபடுத்தும் வகையில் புகை வெளியேறுதல் ,  அதிவேகமாக பயணித்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு ஒரு மாதம் முதல் மூன்று வருடங்களுக்கு குற்றங்களுக்கு ஏற்ப சிறைத்தண்டனையும் 10,000 கட்டார் றியால் தொடக்கம் 50,000 கட்டார் றியால் வரை தண்டப்பணமும் செலுத்த வேண்டிவரும். குற்றங்கள் புரிவோர் தண்டப்பணம் மட்டும் செலுத்த வேண்டும்.

அல்லது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் அல்லது இரண்டினையும் அனுபவிக்க வேண்டிவரும் என கட்டார் அரசு மிகவும் கண்டிப்பான முறையில் அறிவித்துள்ளது. 

அத்துடன் இடுப்புப்பட்டி அணியாதிருத்தல் , 10 வயதிக்கு குறைந்த பிள்ளைகளை முன் ஆசனத்தில் அமர்த்திக் கொண்டு பயணித்தல் , அம்பியுலன்ஸ் , பொலிஸ் வாகனங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்கள் என்பவற்றிற்கு முன்செல்ல அனுமதிக்காமை , முன்
செல்லும் வாகனத்திற்கு இடையில் போதிய இடைவெளியில் வாகனம் செலுத்தாமை போன்றவற்றிற்கும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

ஆப்பிளுக்கு 720 கோடி வழங்க சாம்சங்கிற்கு உத்தரவு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட்  போன்றவற்றின வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தை பிரதி எடுத்து  சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட் போன் தயாரிப்பில்  பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து  சாம்சங் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதுபோல்  சாம்சங் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.  கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த  வழக்கில், 105 கோடி அமெரிக்க டாலரை ஆப்பிளுக்கு இழப்பீடாக  தரும்படி சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

 இந்நிலையில், மேலும் இழப்பீடு வேண்டும் என்று ஆப்பிள் மீண்டும்  வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கலிபோர்னியா  நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் 12 கோடி  அமெரிக்க டாலர் (சுமார் ரூ.720 கோடி) வழங்க நேற்று உத்தரவிட்டது.

இணையப் பாதுகாப்பிற்கு மாபெரும் எச்சரிக்கை! ஹார்ட்பிலீட் (Heartbleed)

இணையத்தை உலுக்கும் ஹார்ட்பிலீட்



ஹார்ட்பிலீட் என்றால் என்ன ? ஏன் இது இணைய உலகில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்திருக்கும். நீங்கள் அலட்சியம் செய்தாலும் கூட தொழில்நுட்ப இணையதளங்களும் செய்தி தளங்களும் ஹார்ட்பிலீட் பற்றி அலறிக்கொண்டிருப்பதை பார்த்து குழம்பியிருக்கலாம். அநேகமாக எல்லா முன்னணி தொழில்நுட்ப இணையதளங்களும் ஹார்ட்பிலீட் பற்றிய விளக்கத்தை வெளியிட்டுள்ளன. எல்லாவற்றிலுமே ,இது முழுமுழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை குறிப்புடன் முடிந்த வரை எளிதான விளக்கத்தை முன்வைத்துள்ளன.

புரியாத தொழில்நுட்பம் சார்ந்தது என்றாலும் பலவிதங்களில் சராசரி இணையவாசிகளை பாதிக்ககூடியது என்பதால் இது பற்றி தெரிந்து கொள்வது நலம்.

ஹார்ட்பிலீட் பற்றி ஒற்றை வரியில் சொல்வதானால் , இணையத்தில் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் சாப்ட்வேரில் ஏற்படுள்ள ஓட்டை . இந்த ஓட்டை வழியாக தாக்காளர்கள் பாஸ்வேர்டு முதல் கொண்டு கிரிடிட் கார்டு எண் வரை முக்கிய தகவல்களை களவாடிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இதில் மோசம் என்னவென்றால் இப்படி களவாடப்படுவது தெரியவே தெரியாது. 

இந்த அறிமுகம் எதையும் விளக்கவில்லை என்றால் இன்னும் விரிவாக பார்ப்போம். இணையத்தில் எப்போதும் ரகசிய கைகுலுக்கல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த கைகுலுக்கல் தான் இணையத்தில் தகவல் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. உங்களது பிரவுசருக்கும் , சர்வருக்கும் இடையே இந்த டிஜிட்டல் குலுக்கல் நடக்கிறது. சாதாரணமாக இமெயிலுக்குள் நுழைய பாஸ்வேர்டு டைப் செய்வதில் இருந்து முக்கியமான தகவல்களை அனுப்பி வைப்பது வரை எல்லாவற்றையும் பாதுகாப்பாக மேற்கொள்ள இந்த கைகுலுக்கல் அவசியம். இந்த கைலுக்குகளின் போது என்ன நடக்கிறது என்றால் பிரவுசருக்கும் சர்வருக்கும் இடையே தொடர்பு உண்டாகிறது. பொதுவாக பாஸ்வேர்டு மற்றும் முக்கிய தகவல்கள் ( கிரிடிகார்டு எண்,வங்கி கணக்கி எண்) போன்றவை என்கிரிப்ட் செய்யப்பட்டு சங்கேத குறியீடுகளாக அனுப்பி வைக்கப்படுகின்றன. பிரவுசரில் இருந்து இந்த தகவல்கள் சர்வருக்கு போய் சேரும் போது , ஆம் சரியான இடத்தில் இருந்து தான் கோரிக்கை வந்திருக்கிறது என்பதை சர்வர் உறுதி செய்து கொண்டால் தான் இந்த பரிமாற்றத்தை அனுமதிக்கும் . அது தான் பாதுகாப்பாக இருக்கும். இல்லை என்றால் இணைய களவாணிகளுக்கு கொண்டாட்டமாகிவிடும். 
இந்த உறுதியை தான் டிஜிட்டல் கைகுலுக்கல் சாத்தியமாக்கிகிறது. அதாவது பிரவசரில் இருந்து ஒரு இணையதுடிப்பு கேட்கும். சர்வரில் இருந்து ஒரு இதயத்துடிப்பு கேட்கும். பரஸ்பரம் கேட்கப்ட்ட பின் பரிவரத்தனைக்கு பச்சைக்கொடி காட்டப்படும். 

இந்த டிஜிட்டல் சரிபார்த்தலை மேற்கொள்ள எஸ்.எஸ் .எல் மற்றும் டி.எஸ்.எல் ஆகிய இரண்டு முறை பயன்படுதின்றன. சாப்ட்வேர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இந்த சாப்ட்வேர் ஓபன் சோர்ஸ் முறையில் செயல்படுகிறது. இது வரை இந்த முறை நன்றாக தான் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இனியும் செயல்படப்போகிறது. ஆனால் இதனிடையே இந்த சாப்ட்வேரில் ஒரு ஓட்டை இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஓட்டை வழியே இணைய கள்வாணிகள் கைவரிசை காட்டலாம் என்று இணைய உலகம் பதட்டப்படுகிறது. இந்த ஓட்டைக்கு தான் ஹார்ட்பிலீட் என்று பெயர் .

இந்த ஓட்டை இரண்டு ஆண்டுகளாக இருப்பதும் இது வரை கண்டுபிடிக்கப்படாமெலே இருப்பதும் தான் , ஹார்ட்பிலீட் வழக்கமான ஓட்டை அல்ல, வெறும் சாப்ட்வேர் பேட்சால் இதை ஒட்டு சரி செய்து விட முடியாது என அலற வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் இதுவரை என்ன எல்லாம் நடந்த்தோ தெரியாது என்கின்றனர். கண்டுபிடிக்கப்படாமல் இருந்த்தால் இனியும் கூட களவாணிகள் தவறாக பயன்படுத்தினால் தெரியாமலே இருக்கலாம் என்பதால் ரிஸ்கோ ரிஸ்க் என்கின்றனர்.

விபரீதமான விஷயம்  என்றாலும் இதற்காக எஸ் எஸ் எல் முறையை குற்றம் சொல்வதற்கில்லை என்கின்றனர். ஓப்ன சோர்ஸ் மீதும் பழி போட வேண்டாம் என்கின்றனர். கோடு எழுதுவதில் ஏற்பட்ட பிழை தான் இதற்கு காரணம் என்கின்றனர்.

சரி, இதனால் என்ன ஆகும்? என்ன வேண்டுமானால் ஆகலாம். இமெயில் பாஸ்வேர்டு பறிபோகலாம். கிரிடிட் கார்டு விஷமிகள் கைக்கு போகலாம்.  இணைய பாதுகாப்பிற்கான ரகசிய திறவுகோள்கள் வேண்டாதவர்களிடம் கிடைத்தால் என்ன எல்லாம் நடக்குமோ அத்தனை விபரீதமும் நிகழலாம்.
சரி, இதை தடுக்க முடியாத?முடியும் . அதற்கான தீர்வுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இணையவாசிகளால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது. இணைவாசிகளுக்கு சேவை வழங்கும் இணையதளங்கள் பாதிப்பு இருக்கிறதா என பார்த்து சரி செய்தாக வேண்டும். இணைவாசிகள் ஒரு பாதுகாப்பிற்காக தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்திற்கு பாதிப்பு உண்டா என்று அறிந்து கொள்வதற்கான பட்டியலை மாஷபில் வெளியிட்டுள்ளது. இங்கே பார்க்காவும் ; http://mashable.com/2014/04/09/heartbleed-bug-websites-affected/

கண்ணில் படாமலே இருந்த இந்த சாப்ட்வேர் ஓட்டையை கோட்னோனிகான் எனும் இணைய பாதுகாப்பு நிறுவனம் கண்டுபிடித்துள்லது.கூகிள் பொறியாளர் ஒருவரும் இதை கண்டுபிடித்துள்ளார். இந்நிறுவனம் ( Codenomicon ) ஹார்ட்ப்லீடை விளக்க இதே பெயரில் இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது. ( http://heartbleed.com/) . கொஞ்சம் ரிஸ்க் எடுத்து படித்து புரிந்து கொள்ள பாருங்கள்.

இந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு சபாஷ். ஹார்ட்பிலீட் பற்றிய விளக்க கட்டுரைகளில் இது கொஞ்சம் பரவாயில்லை: http://www.gizmodo.in/Gizmodo/Heartbleed-Why-the-Internets-Gaping-Security-Hole-Is-So-Scary/articleshow/33462151.cms

Heartbleed in Wikipedia: http://en.wikipedia.org/wiki/Heartbleed

Article Source: http://cybersimman.wordpress.com/2014/04/10/virus-7/

Sunday, May 4, 2014

அரபு நாடுகளைத் தாக்கி வரும் மெர்ஸ் அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்தது கண்டுபிடிப்பு

சவுதி அரேபியா உட்பட அரபு நாடுகளில் சமீப காலமாக மிக விரைவாகப் பரவி வரும் ஆட்கொல்லி தொற்று நோய் மேர்ஸ் (MERS) ஆகும்.

இந்த மேர்ஸ் வைரஸால் தாக்கப் பட்டு இதுவரைக்கும் 70 இற்கும் மேற்பட்டோர் அரபு தேசத்தில் பலியாகியுள்ளனர். இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாத மேர்ஸ் வைரஸ் தற்போது அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் ஒருவருக்குப் பரவியிருந்தமையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சமீபத்தில் சவுதி அரேபியாவுக்குச் சென்று விட்டு இன்டியானாவுக்குத் திரும்பிய ஒருவரையே இந்த நோய் தக்கியுள்ளது மருத்துவப் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. தற்போது இன்டியானா வைத்தியசாலையில் தனிமையில் சிகிச்சை பெற்று வரும் இந்நபரின் சொந்த விபரங்கள் மற்றும் இவர் மூலமாக வேறு யருக்கேனும் இந்நோய் பரவி இருக்கலாமா என்ற தகவல் ஆகியவற்றை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனினும் குறித்த நபர் சுகாதார ஆர்வலர் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நபர் ஏப்பிரல் 24 இல் ரியாத்தில் இருந்து லண்டனுக்கும் பின்னர் சிக்காக்கோவுக்குப் பயணித்து பஸ் மூலம் இந்தியானாவுக்கு வந்து சேர்ந்துள்ளார். ஏப்பிரல் 27 முதல் மூச்சு வாங்குதல்,இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை எதிர்நோக்கியிருந்த இவர் தனது பயணப் பாதையின் போது எத்தனை பேருக்கு மேர்ஸ் வைரஸ் இனைப் பரப்பி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. எனினும் MERS வைரஸ் தாக்கப் பட்டவர் இன்னொருவருடன் மிக அருகில் உடல் தொடர்பு வைத்துக் கொள்ளும் போதே வீரியமாகப் பரவும் என்றும் கூறப்படுகின்றது.

மேர்ஸ் வைரஸ் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இனங் காணப் பட்டதால் அதற்கு Middle East Respiratory Syndrome எனப் பொருள் படும் சுருக்கமாக MERS எனப் பெயர் சூட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகின் அனைத்து மக்களுமே உளவு பார்க்கப் படும் அபாயத்தில் உள்ளனர்:எட்வர்ட் ஸ்னோவ்டென்

அமெரிக்க புலனாய்வுத் திணைக்களங்களின் அத்துமீறல்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்த முன்னால் NSA உளவாளியும் அகதியாக ரஷ்யவில் பாதுகாப்புடன் வாழ்ந்து வருபவருமானவர் எட்வர்ட் ஸ்னோவ்டென்.

இவர் தனிப்பட்ட நபர்கள் மட்டுமன்றி உலக மக்கள் அனைவருமே புலனாய்வுத் திணைக்களங்கள் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படும் அபாயத்திலேயே உள்ளனர் என்று அதிர்ச்சித் தகவலை சமீபத்தில் அளித்துள்ளார்.

இப்புலனாய்வுத் திணைக்களங்கள் எந்த ஒரு நபரினதும் தொலைபேசி அழைப்புக்கள், ஈ மெயில்கள், கோப்புக்கள், இணையத் தள தேடல் பதிவுகள் (search history) மட்டுமன்றி நீங்கள் எப்பொருளை வாங்குகின்றீர்கள், உங்கள் நண்பர்கள் யார் மற்றும் எங்கெங்கு நீங்கள் செல்கின்றீர்கள், யாரை நேசிக்கின்றீர்கள் போன்ற அனைத்து விடயங்களையும் கண்காணிக்கும் திறன் உடையவை என்பதுடன் கடந்த காலத்தில் இக்கண்காணிப்பினை மேற் கொண்டிருந்தன எனவும் ஸ்னோவ்டென் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்னொவ்டென் தனது இப்புதிய கருத்துக்களை கனடாவின் டொரோன்டோ நகரில் பொது மக்கள் கண்காணிப்பு (surveillance) தொடர்பாக நடந்த விவாதத்தின் போது குறுகிய நீளமுடைய வீடியோப் பதிவின் மூலம் தெரிவித்தார். இவ்விவாதத்தில் கலந்து கொண்ட Mr.Glenn Greenwald எனும் பத்திரிகையாளர் ஸ்னோவ்டெனின் தகவல் கசிவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய புத்தகம் கடந்த மாதம் கார்டியனின் புலிட்ஷெர் விருதை வென்றிருந்ததுடன் ஸ்னோவ்டென் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வெளியிட்ட தகவல்களும் முதன் முதலாக கடந்த ஜூன் மாதம் கார்டியன் (Guardian) பத்திரிகையிலேயே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.