சவுதி அரேபியா உட்பட அரபு நாடுகளில் சமீப காலமாக மிக விரைவாகப் பரவி வரும் ஆட்கொல்லி தொற்று நோய் மேர்ஸ் (MERS) ஆகும்.
இந்த மேர்ஸ் வைரஸால் தாக்கப் பட்டு
இதுவரைக்கும் 70 இற்கும் மேற்பட்டோர் அரபு தேசத்தில் பலியாகியுள்ளனர்.
இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாத மேர்ஸ் வைரஸ் தற்போது
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் ஒருவருக்குப் பரவியிருந்தமையும்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சமீபத்தில் சவுதி அரேபியாவுக்குச் சென்று விட்டு இன்டியானாவுக்குத்
திரும்பிய ஒருவரையே இந்த நோய் தக்கியுள்ளது மருத்துவப் பரிசோதனைகளில் தெரிய
வந்துள்ளது. தற்போது இன்டியானா வைத்தியசாலையில் தனிமையில் சிகிச்சை பெற்று
வரும் இந்நபரின் சொந்த விபரங்கள் மற்றும் இவர் மூலமாக வேறு யருக்கேனும்
இந்நோய் பரவி இருக்கலாமா என்ற தகவல் ஆகியவற்றை வெளியிட அதிகாரிகள் மறுத்து
விட்டனர். எனினும் குறித்த நபர் சுகாதார ஆர்வலர் எனத் தெரிய வந்துள்ளது.
இந்நபர் ஏப்பிரல் 24 இல் ரியாத்தில் இருந்து லண்டனுக்கும் பின்னர்
சிக்காக்கோவுக்குப் பயணித்து பஸ் மூலம் இந்தியானாவுக்கு வந்து
சேர்ந்துள்ளார். ஏப்பிரல் 27 முதல் மூச்சு வாங்குதல்,இருமல் மற்றும்
காய்ச்சல் போன்ற அறிகுறிகளை எதிர்நோக்கியிருந்த இவர் தனது பயணப் பாதையின்
போது எத்தனை பேருக்கு மேர்ஸ் வைரஸ் இனைப் பரப்பி இருக்கலாம் என்ற அச்சம்
நிலவுகின்றது. எனினும் MERS வைரஸ் தாக்கப் பட்டவர் இன்னொருவருடன் மிக
அருகில் உடல் தொடர்பு வைத்துக் கொள்ளும் போதே வீரியமாகப் பரவும் என்றும்
கூறப்படுகின்றது.
மேர்ஸ் வைரஸ் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில்
இனங் காணப் பட்டதால் அதற்கு Middle East Respiratory Syndrome எனப் பொருள்
படும் சுருக்கமாக MERS எனப் பெயர் சூட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment