உலகம் முழுதும் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் மிக நூதனமாக கணணி ஹேக் செய்யும் திறமைசாலிகளால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில்
அமெரிக்காவின் FBI புலனாய்வு அமைப்பு மற்றும் சர்வதேச போலிசார் இணைந்து
மிகப் பெரும் தேடுதல் வேட்டை செய்து சுமார் 19 நாடுகளில் இருந்து 90 பேர்
வரை கைது செய்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவின் பருவ வயது உலக அழகியான கஸ்ஸிடி வோல்ஃப் உம்
கைதானவர்களில் ஒருவர் என்பதுடன் Blackshades எனும் malware இன் மூலம்
ஹேக்கிங் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது. இக்கைது நடவடிக்கை பற்றி அமெரிக்க சட்ட வல்லுனர் ப்ரீட்
பராரா கூறுகையில், 'உலகம் முழுதும் இந்த Hacking எனும் Cyber crime இனால்
பல மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இதனால் சுமார் 2
வருடங்களாகத் தொடர்ச்சியாக கண்காணித்து இக்கைது நடவடிக்கை மேற்கொண்டோம்.
இதனால குற்றவாளிகள் தமது சான்றுகளை அழிப்பதற்கான அவகாசம்
கிடைத்திருக்காது.' என்றார். கடந்த வாரம் ஹேக்கர்களால் உபயோகிக்கப் படும்
இணைய கருத்துக் கணிப்பு தளத்தினை குறி வைத்து இக்கைது நடவடிக்கை
முன்னெடுக்கப் பட்டது.
மேலும் FBI மற்றும் பராராவின் கூற்றுப் படி குற்றவாளிகள் Blackshades
இனை வங்கிக் கொள்ளை போன்ற அனைத்து நாச வேலைகளுக்கும் உபயோகித்து
வந்ததாகவும் கடந்த சில வருடங்களாக உலகில் சைபர் கிரைமை அரங்கேற்ற மிகப்
பிரசித்தமான RAT எனும் செயலியாக இது இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்
பட்டுள்ளது. இதேவேளை சீன அரசு தனது 5 PLA இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா
சுமத்திய ஹேக்கிங் குற்றச்சாட்டு மற்றும் தண்டனை விதித்தலை ஏற்க
மறுத்துள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு சைபர் தொழிநுட்பத்தை
அதிகரிக்கும் நிகழ்ச்சியையும் ரத்து செய்துள்ளது.

No comments:
Post a Comment