இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதில் இணைய உலகம் போட்டி போட்டிக்கொண்டிருக்கின்றது.
அந்த அடிப்படையில் உலகம் முழுவதும் சுமார் 233 மில்லியன்
வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்ட அமெரிக்காவை தலைமையாகக்கொண்டு இயங்கும்
இணையத்தின் மூலம் மிக விரைவாகவும் , பாதுகாப்பாகவும் பொருட்களை விற்பனை
செய்தல் மற்றும் கொள்முதல் செய்தல் போன்ற வர்த்தகத்திற்கு உலகிலேயே
முன்னணியாக திகழ்ந்து வரும் “ஈபே ” யின் இணையத்தளம் இரு வாரங்களுக்கு
முன்னர் மிக மோசமான முறையில் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
மிகப்பெரும் சைபர் தாக்குதலாகக் கருதப்படும் இந்த தகவல்
திருட்டினையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கடவுச்சொல்லை
மாற்றுமாறு ஈபே நிறுவனம் கேட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் சுய தரவுகள் மீது இரு வாரங்களுக்கு முன்னர் சைபர்
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளபோதிலும் வணிகத் தகவல்களை ஹெக்கர்களால் நெருங்க
முடியவில்லை என ஈபே நிறுவனம் கூறியுள்ளது.

No comments:
Post a Comment