நீங்கள் ஓர் தமிழ் சினிமாத் திரைப்பட ரசிகராக இருந்து கொண்டு அதே நேரம்
மென்பொருள் நிரலாக்கப் பிரிவில் (Software programming) வல்லுனராகவும்
உள்ளீர்களா?
மேலும் programming கட்டளைகளை நினைவில் வைத்துக் கொள்ள கஷ்டப்
படுகின்றீர்களா'? உங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் சென்னையைச் சேர்ந்த 4
மென்பொருள் வல்லுனர்கள். அப்படி இவர்கள் என்ன செய்து விட்டார்கள் என
எண்ணுகின்றீர்களா?
வேறொன்றுமில்லை. தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் வரும் பஞ்ச் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு ப்ரோகிராமிங் மொழியை இவர்கள் உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த கணிணி மொழிக்கு இவர்கள் RajiniLang எனப் பெயரும் சூட்டியுள்ளனர். கணணி உலகில் மிகப் பிரசித்தமான Toy மொழிகளான Pascal, Treelang மற்றும் Logo இற்கு இணையாக RajniLang உம் களத்தில் குதித்துள்ளது. RajniLang இன் முக்கியமான கட்டளைகள் சூப்பர்ஸ்டாரின் பிரசித்தமான பஞ்ச் வசனங்களைக் கொண்டு ஆக்கப் பட்டிருக்கும்.
RajniLang ஐ உருவாக்கிய மென்பொருள் வல்லுனர்களின் பெயர் முறையே V.கிருஷ்ணன் (22), சதீஷ் பாபுர் (23), கார்த்திக் பாபு (22) மற்றும் கிறிஸ் கௌன்டின்யா (22) ஆகும். குழந்தைகளுக்கும் வளர்ந்தவர்களுக்கும் தகவல் நிரலாக்கத்தை இலகுவாக்கும் RajniLang ஐ உருவாக்கிய இவர்கள் அனைவரும் Freshdesk மென்பொருள் சேவை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மொழி குறித்து கிருஷ்ணன் கருத்துரைக்கையில், 'சாதாரண ப்ரோக்கிராமிங் கட்டளைகள் சிக்கலாகவும் அலுப்புத் தட்டுவதாகவும் இருக்கும். இந்நிலையில் ப்ரோகிராமிங் மொழியை விருப்பத்துக்கு உரிய ஒன்றாகவும் இலகுவாகக் கற்கும் விதத்தில் மாற்றுவது குறித்து சிந்தித்த போதே RajniLang இனை உருவாக்கும் திட்டம் மனதில் தட்டியது' என்றுள்ளார்.
இந்த RajniLang இல் உதாரணமாக தட்டச்சுக் கருவிக்கு (Printer) தட்டச்சு செய்க என்ற கட்டளைக்கு 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கின்றான்!' என்ற வசனமும், கூட்டல் கழித்தல் போன்ற கணிதச் செயற்பாட்டுக்கு, 'கூட்டிக் கழிச்சு பாரு சரியா வரும்!' என்ற வசனமும் 'சக்தி கொடு' என்ற வசனமும் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இதேவேளை RajniLang இனை ஓப்பன் சோர்ஸ் முறையில் உலகம் முழுதும் பரப்ப முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் உலகம் முழுதும் இதற்கு ரஜினி ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டும் உள்ளது. இதற்காக இந்த நால்வர் அடங்கிய குழு இணையத் தளம் ஒன்றை ஸ்தாபிக்கவும் முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment