Search

Friday, June 27, 2014

ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களா..?

 
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப, பிரச்னைகளும் பின்தொடர்ந்து வந்துகொண்டேதான் உள்ளது. ஸ்மார்ட் போன் உலக மக்களிடையே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. உலகம் உங்கள் கையில் என்ற அளவுக்கு ஸ்மார்ட் போன்களின் செயல்பாடுகள் உள்ளது. வீட்டிலிருந்த படியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. உலக மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவருகின்றனர். 

இந்த வகை போன்களுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவே இந்த மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களில் பெரும்பாலானவை இணையதளம் மூலமாகவே இயங்கும். இதனால் இந்த மென்பொருள்களை பயன்படுத்தும் போது, வைரஸ் மற்றும் மால்வேர்(தேவையில்லா தகவல்) தொகுப்புகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு பாதிப்பு ஏற்படும் போது நமது செல்போனில் உள்ள தகவல்களை சமூக விரோதிகள் ஹேக் செய்து எடுக்க எளிதாக மாறிவிடுகிறது. குறிப்பாக மால்வேர் புரோகிராம்களில் எளிதாக ஹேக் செய்துவிடுகின்றனர். இதனால் செல்போன்களில் நாம் பதிவு செய்து வைத்த ரகசிய தகவல்கள் அனைத்தும் எளிதாக திருடப்படுகிறது, மேலும் இணையதளத்தில் முக்கிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொடர்ந்து விளம்பர செய்திகளை திரைக்கு கொண்டுவந்து தொந்தரவு கொடுக்கும். 

மேலும் முக்கிய தகவல்கள் திருடப்படுவதன் மூலம், சமூக விரோதிகள் உங்களின் அடையாளத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் செல்போனை ஹேக் செய்து, அதை செயலிழக்க வைக்கலாம். இவற்றை தடுக்க ஸ்மார்ட் போன்களில் உரிய ஆன்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், மேலும் தேவையில்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப் பது மிகவும் நல்லது.

Tuesday, June 24, 2014

சதாம் ஹுசைன் அன்று உதிர்த்த வார்த்தைகள்… இன்று உண்மையானது!

தனக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த, நீதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை நோக்கி சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள் இதோ,
நீ… அமெரிக்காவின் பேச்சினை கேட்டு எனக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளாய். ஆனால் உன்னுடைய மரணம் நிகழப்போவது என்னுடைய மக்கள் கையால் தான் என்பதை மறந்துவிடாதே என்று கூறியுள்ளார்.

அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையாகி போனது இன்று. ஆம், சதாம் ஹுசைனை தூக்கிலிடும்படி தீர்ப்பு வழங்கிய நிதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் போராளி படைகள் பிடித்து அவரை தூக்கிலிட்டனர்.

சதாமிற்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதிக்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளது
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை தூக்கிலிட்ட நீதிபதிக்கு ஐ.எஸ்.எஸ். போராளிகள் மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2003ம் ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வந்தபோது அவர் ஷியா பிரிவன சிலரை கொன்றதாக குற்றம் சொல்லப்பட்டது உலக அரங்கில் ஆனால் அவருடைய ஆட்சிக்கு எதிராக நடந்த அட்கிரமகாரர்களை தான் அவர் கொன்றார்
இதனால் அவருக்கு எதிராக போர் தொடுத்த அமெரிக்காவிற்கு ஷியா பிரிவினரும் ஆதரவளித்துள்ளனர்.

எனவே சதாமின் ஆட்சி வீழ்ச்சியை நோக்கி சென்றதால், பதுங்கு குழி ஒன்றில் தலைமறைவான அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் தீர்ப்பினால் கடந்த 2006ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில் சதாமின் மராணத்தால் ஆத்திரம் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் தற்போது ஈராக்கின் நகரங்களை அடுத்தடுத்தாக கைபற்றி உள்ளனர்

மேலும் சதாமிற்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானிற்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெற்றியே உறுதி செய்து உள்ளனர்

இத்தகவலை சதாம் உசேனின் உதவியாளராக இருந்த இப்ராஹிம் அல் தெளரி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து உள்ளார்



முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பேச்சுக்களை தடை செய்யும் சட்டமூலம் விரைவில்!

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான குரோதப் பேச்சுக்களை தடைசெய்யும் சட்டமூலமொன்று விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

குரோதப் பேச்சுக்களை தடுக்கும் நோக்கில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு முன்வைத்த யோசனைகளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அங்கீகரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம், காழ்ப்புணர்வு பேச்சுகளுக்கு எதிரான தண்டனைக் கோவை சட்ட ஏற்பாடுகளை பொதுச்சட்டத்தின் பகுதியாக்கி, இன மோதல்களையும், அமைதியின்மையினையும் தடுப்பதற்கு முயல்கின்றது. அச்சு, இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இச்சட்டத்தின் மூலம் தணிக்கைக்கு உள்ளாகலாம். சமுதாயங்களுக்கிடையே காழ்ப்புணர்வை தூண்டியமை நிரூபிக்கப்படின் மறியல் தண்டனை அல்லது தண்டம் இல்லையேல் இரண்டும் விதிக்கப்படலாம் என்று வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.

Saturday, June 21, 2014

முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதியைச்சந்தித்தபோது நடந்தவை என்ன.?

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச பொலிஸ் மா அதிபருக்கு இன்று (21) பதுளையில் நடை பெற்ற முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பின் போது பணிப்புரை வழங்கியுள்ளார்.

இன்று சனிக்கிழமை பதுளையில் முஸ்லிம் அமைச்சர்களை ஜனாதிபதி மஹிந்தராஜபஷ் அவசரமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்களான றஊப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌஸி, றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பைசர் முஸ்தபா ஆகியோரும் மற்றும் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் டளஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், இன்று பானந்துறையில் இடம் பெற்ற நோலிமிட்டின் மீதான தீ வைப்புச் சம்பவம் உள்ளிட்ட பல் வேறு விடயங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

இதன் போது பல் வேறு விடங்கள் பற்றிய கலந்துரையாடலும் இடம் பெற்றுள்ளது. இறுதியில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

*அதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட செய்தியொன்றை கூறுதல்,
*யாராக இருந்தாலும் ஒரு இனத்தை தாக்கி பேசுவதை கண்டிப்பாக நிறுத்துதல்,
*மிக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸ் மா அதிபர் ஏற்படுத்தல்,
*ஒவ்வொரு வாரமும் அமைச்சர் பசில் ராஜபகசவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபே ராஜபக்சவின் பங்கு பற்றுதலுடன் சந்திப்பை ஏற்படுத்தி அந்த வாரத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற் கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Source: Online media

Friday, June 20, 2014

பொது பலசேன இணையத் தளம் & இலங்கை அரச இணையத் தளங்கள் மீது இணையவெளித் தாக்குதல்

நேற்றிரவிலிருந்து மீண்டும் ஒரு தடவை இலங்கை அரச இணையத்தளங்கள் மீது இணைய முடக்கத் தாக்குதல்கள் (hacking) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை 352 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக நேற்றிரவு OP Sri Lanka என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட ட்வீட் ஒன்றில் 
Extremist ‘Bodu Bala Sena’ bodubalasena.org has been TangoDown #OpSriLanka #BBS @HackerBrigade #CrimesAgainstHumanity
(இனத்துவேஷமான பொது பலசேனவின் இணையத்தளம் வீழ்த்தப்பட்டது)
என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அதேபோல இப்போது வரை பொது பலசேனவின் இணையத்தளம் இயங்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளது.


இன்னும் பல அரச இணையத்தளங்களும் முடங்கியே இருக்கின்றன.
 
நாட்டு சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரதிபலிப்பாக வெளிநாடுகளில் இயங்கும் hackers கூட்டமைப்பின் எதிர்ப்பு வெளிப்பாடே இது என்று ட்வீட்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
 
பிரதமர் அலுவலகம் Primeminister.gov.lk, வெளிநாடுகள் பலவற்றுக்கான தூதரகங்கள், Sri Lanka Transport Authority, Ceylon Petroleum, the Employee’s Trust Fund website, Ports Authority, National Institute of Health, Department of Lotteries என்று பல முக்கிய தளங்கள் ஹக் செய்யப்பட்டுள்ளன.



கடந்த ஏப்ரல் மாதம் இதே போல இலங்கையின் அரச இணையத்தளங்கள் மீது துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் இன்னும் சில மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் hackers குழுமங்கள் OP Sri Lanka - Operation Sri Lanka என்னும் பெயருடன் இணையவெளிப் போரைப் பிரகடனப்படுத்தி நூற்றுக்கணக்கான இணையத் தளங்களை முடக்கியதோடு, அந்த இணையத்தளங்களின் சகல விபரங்களையும் (login details) வெளிப்படுத்தியிருந்தார்கள்.
 
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்ப்புக்குரல் என்று 'கறுப்பு மே' மாதத்தை நினைவு கூர்ந்ததாக அந்த OP Sri lanka குழுமம் தெரிவித்திருந்தது.
 
எனினும் சில மணி நேரங்களின் பின்னர் அனேக தளங்கள் மீண்டும் மீட்கப்பட்டு செயற்பட வைக்கப்பட்டன. 
 
எனினும் இப்போதைய தாக்குதல் கடந்த ஞாயிறு பொது பலசேன முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்த சம்பவங்களின் எதிரொலி என்று கருதப்படுகிறது.
 
அதிலும் முதல் குறியாக பொது பலசேனவின் தளம் முடக்கப்பட்டதும் அதையே காட்டியிருக்கிறது.
 
Source: http://gossip.sooriyanfm.lk/101/2014/06/sri-lankan-websites-hacked
 

Thursday, June 19, 2014

ஜனாதிபதி -ரிசாத் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி வாயைப் பொத்து என சீறியும் விழுந்தார்

அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது அப்போது அங்கு பேருவளை மற்றும் அளுத்கமை சம்பவம் குறித்து அலசப்பட்டது.

இந்த வேளையில் குறிக்கிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் – ஜனாதிபதியை நோக்கி 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு பிறகு உங்களின் ஆட்சியில் தான் மீண்டும் ஒரு இனக்ககலவரமும் பேரழிவும் ஏற்பட்டுள்ளன.

அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் காரணமானவர் ஞானசார தேரர் ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இனியும் நீங்கள் கைது செய்யாவிட்டால் இதைவிட மோசமான அழிவை இந்த நாடு சந்திக்கும் என்றார்.

அப்போது ஜனாதிபதி அமைச்சர் ரிசாத் பதியுதீனைப் பார்த்து நீங்கள் முஸ்லிம்களுக்காக பேசுவதைப்போல் இங்குள்ள சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு பேசத் தொடங்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா எனக் கேட்டார்.



இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் நீங்கள் அப்படி  கூறக் முடியாது. நீங்கள் ஜனாதிபதி சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ் ,முஸ்லிம் மக்கள் என அனைவருக்கும் பொதுவானவர். நீங்கள் அனைவரையும் சமனாகவே பார்க்க வேண்டும். வாக்கை மையமாகக் கொண்டு நீங்கள் செயற்பட கூடாது என்றார்.

இந்த பதில் ஜனாதிபதிக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. கதிரையை விட்டு ஆவேசத்துடன் எழுந்த ஜனாதிபதி உன்னுடைய பேச்சை உடன் நிறுத்து வாயைப் பொத்து என்று உரத்து சத்தம் இட்டு, நீ ஒரு இனவாதி, நீ ஒரு மதவாதி ,உன்னுடைய செயற்பாடுகளை அவாதானித்துக் கொண்டுதான் வருகிறேன் என சீறிப்பாய்ந்தார்.

இதன் பிற்பாடு அமளிதுமளி ஏற்பட்டது.

இந்த வேளை அமைச்சர் ரிசாதை நோக்கி கை நீட்டிய சம்பிக ரணவக்க பொதுபல சேனாவை மட்டும் தடைசெய்ய முடியாது என்றார்.

இதனை கடுமையாக எதிர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் பொதுபலசேனாவை மட்டும் முடியாது என்றால் தடைசெய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் ஏதும் இருக்கதின்றதா எனக் கேட்டார். எநதவொரு முஸ்லிம் அமைப்பும் இனவாதமாக செயற்படவில்லை எனக் கூறினார் இதன் பிற்பாடு அமைச்சரவை கலைந்தது.

Source: http://srilankamuslims.lk

Tuesday, June 17, 2014

மத்திய கிழக்கில் சிங்களவர்கள் தொழில் வாய்ப்பை இழக்கும் ஆபத்து

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio1.html#sthash.Zk7HgvVg.dpuf
சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio1.html#sthash.Zk7HgvVg.dpuf
சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio1.html#sthash.Zk7HgvVg.dpuf
சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்த போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல முஸ்லிம் நாடுகள், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம் நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறித்து இன்று நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio1.html#sthash.Zk7HgvVg.dpuf

சமாதானம்- ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பங்களிப்புக்கான விருது மஹிந்த ராஜபக்ஷவிற்கு!



இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்குமான பங்களிப்புக்கான உயரிய விருது பொலிவியாவினால் வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொலிவியாவின் துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியா லினேராவினால் குறித்த விருது மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Monday, June 16, 2014

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து மாயமான ஆல்பிரட்!-1Ⓟ

1928-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி, முன் மாலை நேரம்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அந்த நாட்களில் கருதப்பட்ட பிசினெஸ்மேன் ஆல்பிரட் லொவென்டேன், பிரிட்டனின் க்ரொய்டன் விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கே அவருக்காக அவரது பிரத்தியேக விமானம் தயாராக இருந்தது. அதில் ஏறிக்கொண்டார்.

க்ரொய்டன் விமான நிலையம்
க்ரொய்டன் விமான நிலையம்

இது அவர் வழமையாக செய்யும் பயணம். பிரிட்டனில் அவரது பணி முடிந்ததும் இந்த சிறிய ஏர்போர்ட்டில் இருந்து டேக்-ஆஃப் செய்யும் விமானம், பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் நாட்டு கடல் பகுதிக்கு மேலாகப் பறந்து, பெல்ஜியம் நாட்டு தலைநகர் ப்ரசெல்ஸில் லேன்டிங் செய்யும். ப்ரசெல்ஸ் நகரில்தான் ஆல்பிரட் தனது மனைவி மெடலீனுடன் வசித்துவந்தார். கோடீஸ்வரர் ஆல்பிரட்டை அந்த நாட்களில் ஐரோப்பாவில் அறியாதவர்களே கிடையாது. 



1-ம் உலக யுத்தத்துக்கு முன்னரே பெரும் பணக்காரராக இருந்த ஆல்பிரட், யுத்தம் முடிந்தபின் பிசினெஸ்ஸில் புகுந்து விளையாடினார். அவர் ஐரோப்பாவில் ஆரம்பித்த பல நிறுவனங்கள்தான், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கும் ஒப்பந்தங்களை பெற்றிருந்தது.

நாடுகளுக்கே மின்சாரம் வழங்கும் கான்ட்ராக்ட் என்றால், இதில் எத்தனை மில்லியனில் பணம் கொட்டும் என்று ஊகித்துக் கொள்ளுங்களேன்.
பணம் கொட்டிக்கிடந்த அதே நேரத்தில், அவருக்கு ஏராளமான எதிரிகளும் இருந்தனர். அனைவரும் பிசினெஸ் ரீதியான எதிரிகள்தான்.

நாம் குறிப்பிட்ட 1928 ஜூலை 4-ம் தேதி, பறப்பதற்கு உத்தமமான தினம். வானம் தெளிவாக இருந்தது. ஆல்பிரட் செல்லவேண்டிய விமானம், நன்றாக செக் செய்யப்பட்டு, துல்லியமான கண்டிஷனில் இருந்தது.

விமானத்தை செலுத்த காத்திருந்த விமானி டோனல்டு ட்ரு, பிளைட் கதவு அருகே நின்று ஆல்பிரட்டை வரவேற்றபோது, “இன்றைய பயணம் மிகவும் சுலபமாக, எந்தவித சிக்கலும் இல்லாமல் இருக்கும்” என்றார்.

மற்றவர்களுக்கு எப்படியோ, தமக்கு அது சிக்கல் வாய்ந்த பயணமாக இருக்கும் என்பது, ஆல்பிரட்டுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
காரணம், இந்த விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்துக்குள் இருந்த ஆல்பிரட் திடீரென மாயமாக மறைய போகிறார்!
இந்த சம்பவம் நடந்து இப்போது 86 ஆண்டுகளின் பின்னரும், அவர் மாயமாக மறைந்த மர்மம் துலக்கப்படவில்லை. உலகின் தீர்க்கப்படாத மர்மங்கள் என்ற பட்டியலில் இடம்பெற்று விட்டார், ஆல்பிரட்!

விமானம் வானில் பறக்க தொடங்கியபோது பிரதான பகுதிக்குள் இருந்த பிரத்தியேக சீட்டில் ஆல்பிரட் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகேயுள்ள சீட்டில் அவரது உதவியாளர் ஆர்தர் அமர்ந்து கொண்டார். இரு டைப்பிஸ்ட் பெண்களும் தங்களது மேஜைகளில் அமர்ந்து டைப் பண்ணத் தொடங்கினார்கள். 

காக்பிட்டில் இருந்து பிரதான பகுதியைப் பார்ப்பதற்கு ஒரு கண்ணாடி ஜன்னல் உண்டு. அதனூடாக விமானத்தின் கோ-பைலட் பார்த்தபோது ஆல்பிரட் விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே கீழே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

சரி. அதன்பின் அந்த பயணத்தின்போது நடந்ததுதான் ரியல் மர்மம்!

எனது மக்களைக் காப்பாற்ற முடியாத நான், அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்: ரவூப் ஹக்கீம்

எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

கலவரம் இடம்பெற்ற அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளுக்கு இன்று திங்கட்கிழமை காலை சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்றும் தோன்றுகிறது என்று ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

இதனிடையே, அரசாங்கத்தின் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா, இல்லையா என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அல்லது நாளை தன்னுடைய முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.

அளுத்கம- பேருவளை கலவரம்: மத அடிப்படைவாதம் எனும் கருவி!

இலங்கை பல மோசமான விடியல்களைக் கண்டிருக்கிறது. அதுவும், மதவாதமும், இனவாதமும் சேர்ந்து மக்களையும், உடமைகளையும், உரிமைகளையும் வேட்டையாடிய விடியல்களைக் கண்டிருக்கிறது. அப்படியான  அசம்பாவீதத்தின் வடுக்களோடு விடிந்த மற்றொரு காலையிலேயே இன்றைய ‘எமது பார்வையில்’ பகுதியை எழுத வேண்டிய ஏற்பட்டிருக்கிறது.

மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் குறிப்பிடளவில் வாழும் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்த மோதல்கள் கலவரமாக மாறி சில உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பல வீடுகளும், 10க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் எரியூட்டப்பட்டிருக்கின்றன. அதன் கொந்தளிப்பு கொழும்பின் தெஹிவளையில் இருக்கும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மருந்தகத்தை குண்டர் குழுவொன்று அடித்து உடைத்து தீவைக்கும் அளவுக்கு சென்றது.

பொது பல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பு பொலிஸாரின் அனுமதியோடு அளுத்கம பகுதியில் நேற்று மாலை ஊர்வலத்தினையும், கூட்டத்தினையும் நடத்தியது. அதன்போதே, பொது பல சேனாவினருக்கும், அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது. இதன்போது,, வெளியிடங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்கள் அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

“விலை குறைவாக கிடைக்கின்றது என்பதற்காக, முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூளை இல்லை. இருந்திருந்தால், முஸ்லிம் ஒருவருக்கு நீதியமைச்சைக் கொடுத்திருப்பாரா?” என்று நேற்றைய கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டிருக்கிறார்.

பொது பல சேனாவும், செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரும் அரசின் ஆதரவோடு இயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல தரப்பினாலும் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் பின்பற்றும் ஹலால் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்தியதன் மூலம் பொது பல சேனா பல தளங்களினதும் கவனத்துக்கு வந்தது. அப்போது அந்த அமைப்பின் அலுவலகமொன்றை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைத்திருந்தார்.

முஸ்லிம்களை பிரதான இலக்காகவும், மற்றைய சிறுபான்மை மதங்களான இந்து, கிறிஸ்தவர்களை பகுதி இலக்காகவும் கொண்டே பொது பல சேனா தன்னுடைய செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. அந்தச் செயற்திட்டங்களை சிறுபான்மையினரை அதிகம் கோபத்துக்குள்ளாக்கும் செயற்பாடுகளாகவே இருந்து வருகிறது. பல நேரங்களின் பொலிஸாரை மீறிய அதிகாரத்தைப் பெற்றவர்கள் போல செயற்படுகின்றார்கள். அண்மையில் கூட ஜாதிக பல சேனா என்ற அமைப்பு கொழும்பில் நடத்தவிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை பலவந்தமாக உள்நுழைந்து பொது பல சேனாவின் பிக்குகள் நிறுத்தியிருந்தனர்.

அடிப்படையில் பொது பல சேனா, பௌத்த மதத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதே தன்னுடைய இலக்கு என்று கூறிக்கொள்கிறது. ஆனால், அதன் உள்நோக்கங்கள் அல்லது செயற்பாடுகள் மிகமோசமான விளைவுகளை நாட்டில் மீண்டும் ஏற்படுத்தி விடக் கூடும் என்கிற அளவிலேயே இருக்கின்றது.

முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் அளுத்கம பகுதில் கூட்டமொன்றை நடத்தி, அங்கு வைத்து முஸ்லிம்களின் அழிவு தொடங்கிவிட்டது என்பது மாதிரியான கருத்துக்களை கலபொட அத்தே ஞானசார தேரர் வெளியிடுகிறார். இது, என்ன மாதிரியான கொந்தளிப்பை முஸ்லிம் சமூகத்தினரிடையே ஏற்படுத்தும்? அதன் விளைவுகள் தெரிந்த நிலையிலேயே இவ்வாறான செயற்பாடுகளை பொது பல சேனா முன்னெடுக்கின்றது என்று நம்ப வேண்டியிருக்கிறது. நாட்டின் மத அடிப்படைவாதம் எல்லாத் தரப்பிற்குள்ளும் புற்றுப்போல பெருகிக் கொண்டேயிருக்கிறது. அதில், பெரும்புற்றுக்கள் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான பொது பல சேனாவின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அதுவும், இலங்கையின் பிரதான அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இப்போது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாகவே இருக்கின்றன. அதிக தருணங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சர்வதேச ரீதியாக முஸ்லிம் நாடுகளே காப்பாற்றுகின்றன. இவ்வாறான நிலை இருக்கின்ற போதிலும், இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

“எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன். எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா?“ என்று அளுத்கம பிரதேசத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

அளுத்கம- பேருவளைப் பகுதியில் கலவரம் இடம்பெற்றவேளை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லை. ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவும் நாட்டில் இல்லை. இவ்வாறான நிலையிலேயே கலவரம் இடம்பெற்றிருக்கிறது. இது, திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகமும் எழுகிறது.

இதனிடையே, G77 மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பொலிவியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய கலவரங்கள் பற்றி தன்னுடைய உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில், ”சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தண்டனையை வழங்குவதற்காக விசாரணை ஒன்று இடம்பெறும்“ என்று எழுதியிருக்கிறார்.

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் தமது பிரதிநிதிகளை ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நம்பிக்கையில் தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். அவர்கள் ஒன்றில் முற்றாக அரசாங்கத்தோடு இணைந்து கொண்டு அடிமைகளாக வலம் வருகிறார்கள். இல்லை, எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள். அப்போதும், சரியான அரசியலைச் செய்வதில் தெம்பின்றி இருக்கிறார்கள்.

நாட்டின் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு இங்கு இனப்பிரச்சினையோ, மதப்பிரச்சினையோ தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலையும் கட்சிகள் அந்த விடயத்தை முன்னிறுத்தியே அணுகுகின்றன. இந்த நிலையில், பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இன ரீதியிலான அல்லது மத ரீதியிலான உணர்ச்சி வசப்படுதல்களை முன்னிறுத்த வேண்டிய தேவை அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அதன், பிரதிபலிப்பாகவே பொது பல சேனா போன்ற அடிப்படைவாத அமைப்புக்களின் எழுச்சியையும், அதற்கான ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும் காண வேண்டியிருக்கிறது!

Source: 4Tamilmedia.com

இரண்டு குறும்பதிவுகளின் கதை


அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ? அதிலும் வெளிப்படையானத்தன்மை மற்றும் உரையாடல் குணம் டிவிட்டரில் ஆதார குணம் எனும் போது சி.ஐ.ஏ வின் டிவிட்டர் வருகை எப்படி இருக்கும்?

இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, சி.ஐ.ஏ வில் முதல் குறும்பதிவு குறிப்பிட்த்தக்க வகையில் அமைந்து கவனத்தை ஈர்க்கவே செய்தது.
‘ இது தான் எங்கள் முதல் குறும்பதிவு என்பதை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை’

இது தான் அந்த முதல் குறும்பதிவு. பதிவான நாள் ஜூன் 6,2014.
சி.ஐ.வுக்கே உரிய தன்மையுடன் அமைந்த இந்த குறும்பதிவு , சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை விட அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறும்பதிவில் இருந்த கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை டிவிட்டருக்கு உகந்தது என்றால் , இந்த நகைச்சுவை திரை விலக்கிப்பார்த்தால் புரியக்கூடிய சி.ஐ.ஏத்தனம் குரூரமாக புன்னகைக்கும்.
உண்மையில் இது சி.ஐ.ஏ தன்னையே பகடி செய்து கொள்ளும் வகையிலான குறும்பதிவு.

ஒரு உளவு அமைப்பிடம் இருந்து வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றாலும் ,சி.ஐ.வின் செயல்பாடுகள் ரகசியத்தின் உச்சம் தொட்டவை. 1970 களில் அமெரிக்காவில் , ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மூழ்க அடிக்கப்பட்ட்து தொடர்பாக ஒரு சர்ச்சை வெடித்த போது சி.ஐ.ஏ தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்த்து. அப்போது இந்த பிரச்ச்னை பற்றி விடாமல் கேட்ட நிருபருக்கு சி.ஐ.ஏ அளித்த பதில் மிகவும் பிரபலமானது.

‘ இந்த குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை”
இப்படி அளிக்கப்படும் பதிலை எப்படி புரிந்து கொள்வது. அரசு அமைப்பின் மூர்கத்தனம் என்றா? அல்லது சர்ச்சையில் இருந்து நழுவும் சாமர்த்தியம் என்றா?

இதே பதிலை நினைவுப்படுத்தும் வகையில் டிவிட்டருக்கு சற்றே மாற்றம் செய்து சி.ஐ.ஏ தனது முதல் குறும்பதிவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது.
இந்த குறும்பதிவு உடனடியாக மறுகுறும்பதிவிடப்பட்டு( ரிடிவீட்) , அபிமானமும் தெரிவிக்கப்பட்ட்து( பேவரைட்). இரண்டின் எண்ணிக்கையுமே பல்லாயிரக்கணக்கில் பெருகி சில லட்சங்களை தொட்டது.
ஆக, இப்படியாக சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு உலகை கவர்ந்த முதல் குறும்பதிவானது.

ஆனால் சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை எல்லோருமே கைத்தட்டி வரவேற்கவில்லை. பல பதில் குறும்பதிவுகள் அதன் செயல்பாடுகள் மீதான கடுமையான விமர்சனமாக அமைந்திருந்தன. இவற்றில் பல நேரடி தாக்குதலாக இல்லாமல் சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு பாணியிலேயே நக்கலும் நையாண்டியுமாக, ஆனால் அதன் செயலபாடுகளை நச்சென சுட்டிக்காட்டும் வகையில் இருந்தன.

“ இனி சி.ஐ.ஏ டிவிட்டர் கணக்கில் இருந்து உலகில் எங்கோ உள்ள பகுதிகளில் இருந்தெல்லாம் அருமையான சித்தரவதை படங்களை எதிர்பார்க்கலாம்’ என்று ஒரு டிவிட்டர் பயனாளி (@madmanweb ) குறிப்பிட்டிருந்தார்.
சி.ஐ.ஏ என்னை எல்லாம் பின் தொடர பாடுபட வேண்டாம், அவர்களின் சகோதர அமைப்பான என்.எஸ்.ஏ அதை செய்து கொண்டிருக்கிறது’என இன்னொருவர் (@AKBakota ) குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் சில குறும்பதிவுகள் ஈரான் புரட்சி மற்றும் சிலியின் ஆட்சி கவிழ்ப்பு ஆகியவற்றில் சி.ஐ.ஏ க்கு இருப்பதாக சொல்லப்படும் பங்குகளை இடித்துக்காட்டின.

இந்த விமர்சனங்களை மீறி சில நாட்களில் எல்லாம் சி.ஐ.ஏ வின் பின் தொடர்பாளர் எண்ணிக்கை சில லட்சங்களை தொட்டது.
ஒரு மக்கள் தொடர்பு முயற்சியாக தான் சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்துள்ளது. இதே காலத்தில் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களும் சி.ஐ.ஏ சார்பில் அமைக்கப்பட்டன.

ஆனால், சி.ஐ.ஏவை பின் தொடர்பவர்கள் அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர்?

நிற்க, சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு மட்டும் அல்ல ,அதன் டிவிட்டர் பயோவும் கூட கவனிக்கத்தக்கதாக தான் இருக்கிறது.

“ நாங்கள் தேசத்தின் முதல் பாதுகாப்பு அறன். மற்றவர்களால் செய்யமுடியாததை செய்கிறோம். மற்றவர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு செல்கிறோம்’
உள்ளடக்கத்தில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அருமையான டிவிட்டர் பயோ இல்லையா!


இது இன்னொரு முதல்குறும்பதிவு

சி.ஐ.ஏ பற்றி குறிப்பிட்டு விட்டு, எழுத்தாளர் ஜார்ஜ் .ஆர்.ஆர் .மார்டின் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது தான். ஆனால் சி.ஐ.ஏ வருகை தந்த அதே காலத்தில் டிவிட்டரில் நுழைந்ததாலும் , மார்டினுடைய முதல் குறும்பதிவும் கவனத்திற்குரியதாக இருந்தாதாலும் இங்கே மார்டின் டிவிட்டர் வருகை பற்றி குறிப்பிடலாம். அமெரிக்க தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் கேம் ஆப் த்ரொன்ஸ் தொடருக்கான மூலக்கதை வடிவை தந்தவரும் ,லயித்து மகிழக்கூடிய கற்பனை உலகை தனது நாவல்களில் சிருஷ்டிப்பவராக பாராட்ட்டப்படும் எழுத்தாளரான மார்டினின் முதல் குறும்பதிவும் மகத்தானதாகவே இருந்தது. ஜிஆர்.எம் ஸ்பீகிங் (@GRRMspeaking) எனும் முகவரியில் அமைந்திருந்த தனது டிவிட்டர் பக்கத்தில் மார்டினின் முதல் குறும்பதிவு இப்படி இருந்தது:

‘நான் அடிக்கடி டிவீட் செய்யமாட்டேன். தயவுசெய்து எனது லைவ்ஜர்னல் (வலைப்பதிவு) பக்கத்தை பாருங்கள்’ .
எழுத்தாளர்கள் டிவிட்டருக்கு வரும் போது வாசகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக பெரும்பாலான எழுத்தாளர்கள் குறும்பதிவுகளாக தங்கள் எண்ணங்களை அருவி போல் எல்லாம் பகிர்வதில்லை.

இந்த ஏமாற்றத்தை அளிக்காமல் இருக்கும் வகையில் மார்டின் முதல் குறும்பதிவிலேயே அதிகம் குறும்பதிவு செய்யமாட்டேன் என கூறிவிட்டார். அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக தனது வலைப்பதிவையும் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் உண்மையிலேயே அருமையான முதல் குறும்பதிவு தான். அவரது பயோவும் கூட , தயவுசெய்து லைவ்ஜர்னலில் என்னை தொடருங்கள் என்றே அமைந்திருந்தது.

ஆனால் , அடிக்கடி குறும்பதிவிட மாட்டேன் எனும் அறிமுகத்தை மீறி , எழுத்தாளர் மார்டினுக்கு டிவிட்டரில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் சில நாட்களில் கிடைத்தனர்.

ஆக, ஒரே குறும்பதிவில் லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை அள்ளியவர்கள் பட்டியலில் திரைப்ப நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கவேண்டுமா என்ன? மார்டின் போன்ற நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் அந்த பெருமை உண்டு என டிவிட்டர் உலகம் காட்டியிருக்கிறது.

Friday, June 13, 2014

Amazing facts about Bill Gates !


FIFA உலகக் கோப்பை 2014: வண்ணமயமான ஆரம்பக் காட்சிகள் !

FIFA உலகக் கோப்பை 2014 நேற்று பிறேசிலில் ஆரம்பமாகின. இப்போட்டியின் ஆரம்பவிழா காட்சிகள், பிறேசிலுக்கேயுரிய வண்ணமயமான அலங்காரங்களுடன் திகழ்ந்தன.

இந்த ஆரம்ப தின நிகழ்வுகளையும், அதன் பின்னதான போட்டித் தொடரின் முதலாவது ஆட்டத்தினையும், São Paulo நகரின்  Arena Corinthians அரங்குக்கு வெளியேயும், வெவ்வேறு நகரங்களின் மத்தியிலும், கடற்கரையோரங்களிலும், அமைக்கப்பெற்ற பிரம்மாண்டத் தொலைக்காட்சித் திரைகளில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.
அந்தக் கோலகலக் காட்சிகளிலிருந்து சில பதிவுகள் இங்கே ;
























Wednesday, June 11, 2014

நீங்கள் ஐபோன் பாவிப்பவரா ? அமெரிக்காவின் அடுத்த குட்டு அம்பலம்


அமெரிக்காவிடம் FBI , CIA என்று பல உளவு நிறுவனங்கள் உள்ளது யாவரும் அறிந்ததே. இந்த வகையில் என்.எஸ்.ஏ(NSA) national security agency என்ற உளவு நிறுவனமும் அமெரிக்காவில் இயங்கிவருகிறது. இன் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் உரையாடல்களை ஒட்டுக்கொட்டு வருகிறது. இன் நிறுவனம் பாரிய தொழில் நுட்ப்ப வளர்சியடைந்துள்ளது. இவர்களால் உலகில் எந்த ஒரு மூலை முடுக்கிலும் உள்ள நபரின் மோபைல் தொலைபேசியை ஒட்டுக்கேட்க்க முடியும். ஆனா குறித்த நபரின் மோபைல் இலக்கம் மட்டும் தெரிந்தால் போதும். சரி இது சாதாரண விடையம் தானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் மேலும் அதிர்சி தரும் தகவல் ஒன்று கூட உள்ளது. அதாவது ஆப்பிள் ஐபோன்களை பாவிக்கும் நபர்களை இன் நிறுவனம் மிகவும் சுலபமாக ஒட்டுக்கேட்டு வருகிறது.

குறித்த நபர் ஒரு முக்கியமான ஆட்களை சந்திக்கும்வேளை தனது ஆப்பிள் ஐபோனை ஆப்(switch off) செய்து வைத்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வேம். நான் என்ன நினைப்போம் ? மோபைல் போன் ஆப்(OFF) ஆகிவிட்டது என்று. ஆனால் ஆப்பிளை பொறுத்தவரை நீங்கள் போனை சுவிஜ் ஆப் செய்தால் கூட, போனில் உள்ள மைக்(MIC) (குரல் உள்வாங்கி) ஆக்டிவாக தான் இருக்குமாம். இதனூடாக நீங்கள் போனை சுவிஜ் ஆப் செய்தால் கூட, நீங்கள் உரையாடுவதை NSA வால் ஒட்டுக்கேட்க்க முடியும் என்று, சமீபத்தில் இன் நிறுவனத்தில் வேலைபார்த்து பின்னர் தப்பிச் சென்று ரஷ்யாவில் அடைக்கலம் தேடியுள்ள எட்வேட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். இக் கருத்தை பலர் நம்பவில்லை. இது பொய் என்று பலர் கூறினார்கள்.

சில முன்னணி கம்பெனிகள் (NOKIA போன்ற நிறுவனங்கள்) இக்கூற்று உண்மையா என்று ஆராய பெரும் பணத்தைக் கொட்டி ஆராட்சிகளை மேற்கொண்டார்கள். முடிவுகள் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ! எட்வேட் சொன்னது 100 விகிதம் சரியே. ஆப்பிள் ஐபோனை நீங்கள் சுவிஜ் ஆப் செய்தால், அது முற்றிலுமாக ஆப் ஆகாது, என்று கண்டுபிடித்துள்ளார்கள். HOME பட்டனையும் சுவிஜ் ஆப் பட்டனையும் ஒன்றாக அழுத்தி பின்னர் HOME பட்டனை,, மெதுவாக விட்டால் தான் அது முற்றிலுமாக ஆப் ஆகிறது என்று கூறுகிறார்கள். இதனால் ஆப்பிள் ஐபோன் பாதுகாப்பற்ற ஒரு மோபைல் போன் என்று அதன் போட்டி நிறுவனங்கள் தற்போது விளம்பர யுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். நாட்டின் தலைவர்கள், அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள் மற்றும் செல்வந்தர்கள் தற்போது ஆப்பிள் ஐபோனை பாவிக்கவேண்டுமா என்று நினைக்கும் அளவு நிலமை மோசமாக மாறிவிட்டது.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மதம் ”இஸ்லாம்”.


இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் முதன்மையாக திகழும் அமெரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய தரவின் படி, இருபது அமெரிக்க மாநிலங்களில் இரண்டாவது மிகப் பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளதை அறியமுடிகிறது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான “வாஷிங்டன் போஸ்ட்” வெளியிட்டுள்ள தகவலின்படி இஸ்லாம் அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதிகளில் பாரிய வளர்ச்சியை கண்டுவருவதாக தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவில் கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அதிகமான அமெரிக்கர்கள் முஸ்லிம்களாக உள்ளதாக அமெரிக்க மத அமைப்புகளின் கூட்டமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் அமெரிக்காவையே வெற்றி பெரும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருப்பதை நாம் தொடர்ந்து அவதானிக்க முடிகின்றது.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் அமைந்திருந்த பல கிருத்தவ தேவாலயங்கள் தற்போது பள்ளிவாயல்களாகவே மாற்றப்பட்டு வருகின்றன.
அது மட்டுமல்லாமல் சுமார் 2050 ம் ஆண்டுகள் அளவில் பிரான்ஸ் முழுமையாக இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை அழிக்க நினைப்பது முட்டால் தனம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளும் நேரம் சரியாகிவிட்டது என்பதையே இந்த புள்ளி விபரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
(அல்குர்ஆன்09:32)

Monday, June 2, 2014

Skype இல் மொழிமாற்றம்


மென்பொருள் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில், எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து, அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து தற்போது. கலிபோனியாவல் நடந்து கோட் கான்பிரன்சில் இதை பொதுமக்களுக்கு டெமோ செய்து காண்பித்தனர்.

இதில் ஒருவர் ஜெர்மன் மொழியில் பேசுகின்றார். எதில் முனையில் இருப்பவர் அதை ஆங்கிலத்தில் கேட்கின்றார். பின்னர் எதிர் முனையில் இருப்பவர் ஆங்கிலத்தில் பேசுகின்றார். பிறகு ஜேர்மன் மொழியில் பேசியவர் அதை ஜேர்மன் மொழியில் கேட்கின்றார்.

இனி பேசுவதற்கு மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது.

எந்த மொழி தெரிந்தவர்களுக்கு எந்த மொழிகாரர்களிடமும் இனி பேசிக் கொள்ளலாம்.

Skype voice translation டெமோவை பாருங்கள்

In English:

At the demo, Pall, speaking English, and a colleague speaking German conducted a Skype video call. There were a couple of instances when the voice and text translation mixed up minor parts of a sentence, but overall it appeared to be spot on.

Military couple ties the knot on Skype Viber vs. Skype Who is Microsoft’s Satya Nadella?
The conversation was no simple “Hello, how are you?” either. It centered on Pall’s plans to move to London and included the names of streets and neighborhoods in that city as well as discussion of his colleague’s visits to Microsoft’s headquarters in Redmond, Washington.