Search

Monday, June 16, 2014

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து மாயமான ஆல்பிரட்!-1Ⓟ

1928-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி, முன் மாலை நேரம்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அந்த நாட்களில் கருதப்பட்ட பிசினெஸ்மேன் ஆல்பிரட் லொவென்டேன், பிரிட்டனின் க்ரொய்டன் விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கே அவருக்காக அவரது பிரத்தியேக விமானம் தயாராக இருந்தது. அதில் ஏறிக்கொண்டார்.

க்ரொய்டன் விமான நிலையம்
க்ரொய்டன் விமான நிலையம்

இது அவர் வழமையாக செய்யும் பயணம். பிரிட்டனில் அவரது பணி முடிந்ததும் இந்த சிறிய ஏர்போர்ட்டில் இருந்து டேக்-ஆஃப் செய்யும் விமானம், பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் நாட்டு கடல் பகுதிக்கு மேலாகப் பறந்து, பெல்ஜியம் நாட்டு தலைநகர் ப்ரசெல்ஸில் லேன்டிங் செய்யும். ப்ரசெல்ஸ் நகரில்தான் ஆல்பிரட் தனது மனைவி மெடலீனுடன் வசித்துவந்தார். கோடீஸ்வரர் ஆல்பிரட்டை அந்த நாட்களில் ஐரோப்பாவில் அறியாதவர்களே கிடையாது. 



1-ம் உலக யுத்தத்துக்கு முன்னரே பெரும் பணக்காரராக இருந்த ஆல்பிரட், யுத்தம் முடிந்தபின் பிசினெஸ்ஸில் புகுந்து விளையாடினார். அவர் ஐரோப்பாவில் ஆரம்பித்த பல நிறுவனங்கள்தான், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கும் ஒப்பந்தங்களை பெற்றிருந்தது.

நாடுகளுக்கே மின்சாரம் வழங்கும் கான்ட்ராக்ட் என்றால், இதில் எத்தனை மில்லியனில் பணம் கொட்டும் என்று ஊகித்துக் கொள்ளுங்களேன்.
பணம் கொட்டிக்கிடந்த அதே நேரத்தில், அவருக்கு ஏராளமான எதிரிகளும் இருந்தனர். அனைவரும் பிசினெஸ் ரீதியான எதிரிகள்தான்.

நாம் குறிப்பிட்ட 1928 ஜூலை 4-ம் தேதி, பறப்பதற்கு உத்தமமான தினம். வானம் தெளிவாக இருந்தது. ஆல்பிரட் செல்லவேண்டிய விமானம், நன்றாக செக் செய்யப்பட்டு, துல்லியமான கண்டிஷனில் இருந்தது.

விமானத்தை செலுத்த காத்திருந்த விமானி டோனல்டு ட்ரு, பிளைட் கதவு அருகே நின்று ஆல்பிரட்டை வரவேற்றபோது, “இன்றைய பயணம் மிகவும் சுலபமாக, எந்தவித சிக்கலும் இல்லாமல் இருக்கும்” என்றார்.

மற்றவர்களுக்கு எப்படியோ, தமக்கு அது சிக்கல் வாய்ந்த பயணமாக இருக்கும் என்பது, ஆல்பிரட்டுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
காரணம், இந்த விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்துக்குள் இருந்த ஆல்பிரட் திடீரென மாயமாக மறைய போகிறார்!
இந்த சம்பவம் நடந்து இப்போது 86 ஆண்டுகளின் பின்னரும், அவர் மாயமாக மறைந்த மர்மம் துலக்கப்படவில்லை. உலகின் தீர்க்கப்படாத மர்மங்கள் என்ற பட்டியலில் இடம்பெற்று விட்டார், ஆல்பிரட்!

விமானம் வானில் பறக்க தொடங்கியபோது பிரதான பகுதிக்குள் இருந்த பிரத்தியேக சீட்டில் ஆல்பிரட் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகேயுள்ள சீட்டில் அவரது உதவியாளர் ஆர்தர் அமர்ந்து கொண்டார். இரு டைப்பிஸ்ட் பெண்களும் தங்களது மேஜைகளில் அமர்ந்து டைப் பண்ணத் தொடங்கினார்கள். 

காக்பிட்டில் இருந்து பிரதான பகுதியைப் பார்ப்பதற்கு ஒரு கண்ணாடி ஜன்னல் உண்டு. அதனூடாக விமானத்தின் கோ-பைலட் பார்த்தபோது ஆல்பிரட் விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே கீழே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

சரி. அதன்பின் அந்த பயணத்தின்போது நடந்ததுதான் ரியல் மர்மம்!

No comments:

Post a Comment