Search

Wednesday, October 27, 2010

ஆரூடம் புகழ் அக்டோபஸ் 'பால்' மரணம் - ஸ்பெயின் ஆழ்ந்த கவலை!


உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை துல்லியமாக கணித்த ஆக்டோபஸுக்கு தனது வாழ்நாளை கணிக்க முடியாமல் போய்விட்டது போலும்.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பீபா காற்பந்து போட்டிகளின் காலிறுதி, அரையிறுதி, மற்றும் இறுதிப்போட்டி உட்பட 8 போட்டி முடிவுகளை துல்லியமாக கணித்து கூறியதால் உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்த ஆக்டோபஸ் பால், இயற்கை மரணமடைந்துவிட்ட அதிர்ச்சி தகவல், காற்பந்து ரசிகர்களிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் ஓபர் அவுசனில் கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியத்தில் வசித்த மூன்றே வயதான அக்டோபஸ் பாலின் பூர்வீகம் இங்கிலாந்து.

ஃபீபா காற்பந்து போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து 4-1 என ஜேர்மனியிடம் தோற்ற போது, இதனை முன்னரே கணித்துக்கூறிய பாலை, சொந்த நாட்டையே அவமானப்படுத்தியுள்ளது என இங்கிலாந்து ஊடகங்கள் பொறிந்து தள்ளின.

ஸ்பெயின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தும் என பால் அடித்துக்கூறியது நெதர்லாந்து ரசிகர்களிடையேயும் கோபத்தை கிளறியிருந்தது. 'we want paul for the pan' என கொலை மின்னஞ்சல் கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.

இதனால் ஜேர்மனிய அருங்காட்சியத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஸ்பெயின் சொன்னபடியே வெற்றி பெற்றதும், உடனடியாக அக்டோபஸை அந்த நாட்டுக்கு கொண்டு வர ஸ்பெயின் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் விருந்தாளி போல் வந்து மீண்டும் ஜேர்மனிக்கே சென்றுவிட்டது அக்டோபஸ். பாலின் மறைவையொட்டி, அதன் உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஸ்பெயின் ரசிகர்களின் பினோமினல் ஹீரோவாக, இந்த அக்டோபஸ் மாறிவிட்டதால், அவர்களால் சோகத்தை தாங்க முடியவில்லையாம்.

இதேவேளை பாலை தமது அருங்காட்சியத்திலேயே புதைத்து சிறிய சமாதி கட்டப்போவதாக, ஜேர்மனி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது பற்றிய தொகுப்பையும் வெளியிட இருப்பதாக அருங்காட்சியத்தின் ஸ்டீபன் பார்வோல் தெரிவித்துள்ளார்.

Tuesday, October 26, 2010

தும்மலுக்கு காரணம்

து‌ம்ம‌ல் எ‌ன்பது உட‌‌ல் ‌‌கிரு‌மிக‌ளிட‌ம் இரு‌ந்து த‌ப்‌பி‌க்க செ‌ய்யு‌ம் த‌ன்‌னி‌ச்சையான செய‌ல். இதனா‌ல் ப‌ல்வேறு ‌கிரு‌மிக‌ளிட‌ம் இரு‌ந்து நமது உட‌ல் பாதுகா‌க்க‌ப்படு‌கிறது. சு‌ற்று‌ச்சூழ‌லி‌ல் இரு‌க்கு‌ம் ‌கிரு‌மி ஒ‌ன்று உடலு‌க்கு‌ள் நுழைய மு‌ற்படு‌ம் போது அதனை எ‌ச்ச‌ரி‌க்கு‌ம் கரு‌வியாகவு‌ம் து‌ம்மலை‌க் கூறலா‌ம். பலரு‌க்கு‌ம் பல ‌வித‌ங்க‌ளி‌ல் இ‌ந்த ஒ‌‌வ்வாமை‌ வெ‌ளி‌ப்படு‌ம். தொட‌ர் து‌ம்ம‌ல், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல், கா‌ய்‌ச்ச‌ல், சரும‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு என ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌க‌ளி‌ல் இது ஏ‌ற்படு‌ம். மூ‌க்கு வ‌ழியாக ஏதேனு‌ம் ‌கிரு‌மியோ ‌அ‌ல்லது தூசோ உ‌ள்ளே நுழைய மு‌ற்படு‌ம் போது அ‌ங்‌கிரு‌‌‌க்கு‌ம் நர‌ம்புக‌ள் மூளை‌‌யி‌ன் தகவலை‌ப் பெறாமலேயே தன்‌னி‌ச்சையான ஒரு செயலை செ‌ய்‌கிறது. அதுவே து‌ம்ம‌ல். த‌ன்‌னி‌‌ச்சை எ‌ன்பது மூளை‌யிட‌ம் இரு‌ந்து தகவ‌ல் பெறாம‌ல் தானாக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம். ‌சிலரு‌க்கு சாதாரண புகை கூட து‌ம்மலை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடலா‌ம்.

மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல

சில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும்.

கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.

நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, “மூளை செயல்திறன் குறைபாடு’ என்று அழைக்கிறோம். ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்படும்.

தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மூளை வளர்ச்சி குறைவதற்கு, முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் மீது பழி போடப்பட்டது. கரு பாதுகாப்பில் குறைபாடு, சந்தேகமான அறிகுறிகளைக் கண்டறிவதில் தோல்வி, குழந்தை பிறப்பதில் சிக்கல், மூச்சுத் திணறல், குழந்தை பிறந்ததும் அதை உயிர்பித்தலில் குறைபாடு ஆகியவையே காரணம் என, கருதப்பட்டது. இந்த கருத்துக்கள் அனைத்தும் தற்போது பழங்கதையாகி விட்டன. மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம். குழந்தையாக இருக்கும்போதே, எம்.எம்.ஆர்., ஊசி போடுவது அல்லது தனியாக ருபெல்லா நோய் எதிர்ப்பு ஊசி போடுவதோ மேற்கொள்ளலாம். மகளுக்கு திருமண ஏற்பாடு செய்வதற்கு முன், இது போன்ற தடுப்பூசிகளை, அவளுக்குப் போட வேண்டும் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்வதில்லை.

தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தையின் ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்து, மஞ்சள் காமாலை உருவாகும். இதை கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும்.
பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும்.

மூளை செயல்திறன் குறைபாட்டின் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல. இந்தத் தன்மையின் காரணமாக, குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.
மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம்; கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம். குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம்.

விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.

இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, “லொடலொட’வென ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்காது; “வழவழ’ உச்சரிப்பில் இருக்கும். சொல்லின் வடிவம் மாறும். மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும்.

பார்வைத் திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும். மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்து பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும்.

மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை.

* உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை பராமரிக்கவும், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்னை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.

* எலும்பு முறிவு, எலும்பு அழற்சி ஆகியவற்றைக் கையாள, எலும்பு சிகிச்சை மருத்துவர் தேவை.

* தசை பலம் குறைவதால், அடிக்கடி கீழே விழும் நிலை ஏற்படும். அதைத் தவிர்க்க, உடல் இயக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) தேவை.

* சுய பாதுகாப்புத் திறனை வளர்க்க, பணி மேம்பாட்டு நிபுணர் தேவை.

மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிசயங்களால் கிடைக்கப் பெறும் உதவிகள் தான்!

Sunday, October 24, 2010

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பன்றிக் காய்ச்சல் வராமல் தவிர்ப்பது எப்படி?

இன்ப்ளுயென்சா என்றழைக்கப்படுவது சாதாரண குளிர் காய்ச்சல் தான். வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் இது. ஒவ்வொரு ஆண்டும் இது ஏற்பட்டாலும், ஆண்டுக்கு ஆண்டு சற்றே வித்தியாசப்படுகிறது.

20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று, அதிக வீரியம் அடைகிறது. அப்போது வேகமாகப் பரவி, உலகளவில் தொற்று ஏற்பட்டு, அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த ஆண்டு, எச்1என்1 வைரஸ் தொற்று ஏற்பட்டதே; அது, இது போல் உருவானது தான். பறவைகள், பன்றிகளிடம் தோன்றிய இந்த தொற்று, ஒன்று என்ற நிலையிலிருந்து, அதிவேகமாகப் பரவும் தொற்றாக, எட்டாம் நிலைக்கு முன்னேறி விட்டது என, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டம் பரவும் அதிதீவிரமான வைரசாக இது உருமாறி விட்டது என, இந்த மையம் அறிவித்தது. இந்த மையம் அச்சம் கொண்டதற்கேற்ப, எச்1என்1 வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது.

தொற்று பரவும் பூகோள அமைப்பின் மையப் பகுதியில் இந்தியா உள்ளது. எனவே, இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. பன்றிக் கறி சாப்பிட்டாலோ, பன்றிகளைத் தொடுவதன் மூலமோ இந்த நோய் வருவது இல்லை. ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக இந்நோய் பரவுகிறது.

இருமல், தும்மல், எச்சில் துப்புதல் ஆகிய செயல்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. ஒரு தும்மலுக்கு 40 நீர் துளிகள் வெளிவருவதால், அதிலிருந்து தொற்று பரவுகிறது. இந்த துளிகள், தரைகளில், சுவர்களில், கதவுகளில், கைப்பிடிகளில், காசுகளில் என, மனிதன் பயன்படுத்தும் அனைத்து பகுதிகளிலும் படர்கிறது. கையைச் சுத்தம் செய்யாவிட்டால், ஒருவர் கையிலிருந்து அடுத்தவருக்குப் பரவி விடுகிறது.

அதிக சூடு மற்றும் புற ஊதாக் கதிர்கள், 5 முதல் 15 நிமிடத்தில் இந்த வைரசை அழிக்கின்றன. ஆனால், சளியுடன் கலந்து வெளியாகும் இந்தக் கிருமி, 48 மணி நேரம் வரை உயிர் வாழும். அதிக மக்கள் புழங்கும் இடங்கள், காற்று குறைவான இடங்கள், வெயில் படாத இடங்களில், இந்தக் கிருமி வேகமாகப் பரவும். தொற்று ஏற்பட்டிருக்கும் ஒருவரின் அருகில் செல்லும் மற்றொருவருக்கு, 2 – 3 நாட்களில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படத் துவங்கும்.

சாதா சளி போல உருவாகும் இந்தத் தொற்று, சோர்வு, காய்ச்சல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து தண்ணீர் வழிதல், தசைகளில் வலி ஆகியவற்றுடன் தீவிரமடையும். அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு, எட்டு நாட்கள் இது தொடரும். அதன் பிறகு, முற்றிலுமாக குணமடைந்து விடும். நோயை பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும். சாதா குளிர் காய்ச்சலுக்கும், எச்1என்1 காய்ச்சலுக்கும் அறிகுறிகள் ஒன்றே. தொண்டை மற்றும் மூக்கில் உள்ள திரவங்கள் வழித்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்களில் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இந்தக் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்க மருந்துகள் கொடுக்கப்படும். கடும் காய்ச்சல் ஏற்பட்டால், பாரசிட்டமால் 500 மி.கி., மாத்திரை போடலாம். ஆனால், நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் இம்மாத்திரை போடலாம். அதற்கும் குறைவான இடைவெளியில் போடக் கூடாது. ப்ரூபென் போன்ற வலி நிவாரணிகளும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்கவே கூடாது. கொடுத்தால், அதி பயங்கரமான ரேயஸ் சிண்ட்ரோம் என்ற பாதிப்பை ஏற்படுத்தி விடும். உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆசெல்டாமிவிர் (டாமிப்ளூ), ஜானாமிவிர் (ரெலென்சா) போன்ற குறிப்பிட்ட மருந்துகளும் இதற்கு உள்ளன. சரியான சிகிச்சை முறை என்பது, பாதிப்பு ஏற்பட்ட 48 மணி நேரத்தில் துவங்குவது தான். அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்க முடியுமே தவிர, தொடர்ந்து இந்த மருந்துகள் உட்கொள்ளும் போது, இந்த மருந்துகளுக்கு வைரஸ் கட்டுப்படாத நிலை ஏற்படும். மருந்து உட்கொண்டால், நிமோனியா, நுரையீரல் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம்.
எந்த மருந்தையுமே, டாக்டரின் பரிந்துரை இன்றி சாப்பிடக் கூடாது. நோய் வருமுன் தடுக்கும் வகையில் இந்த மருந்தை உட்கொள்ளலாம் என்று கருதலாகாது. தொற்று இருந்தால் மட்டுமே, இந்த மருந்து பலன் தரும். குழந்தைகள், 65 வயதைக் கடந்த முதியோர், கர்ப்பிணிகள், சிகரெட் புகைப்பவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், எச்.ஐ.வி., தொற்று உள்ளவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தொற்று ஏற்பட்டால், அதிக சிக்கல் உண்டாகும்.

பாதிப்பு அதிகமானால், மாரடைப்பு, ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் செய லிழத்தல் ஆகியவை ஏற்படும். பல்லுறுப்பு செயலிழத்தல் ஏற்பட்டு, நுரையீரல் முற்றிலும் செயலிழந்து போகும்.

குளிர் காய்ச்சலை தடுத்து, அது பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

* நோயாளிகளை பார்த்த உடன், கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பணத்தை கையாண்ட பிறகு, ஒவ்வொரு முறையும் கை கழுவ வேண்டும்.

* கதவின் கைப்பிடிகளை, கிருமிநாசினி மூலம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

* வெளியில் செல்லும் போது, முகமூடி அணிய வேண்டும்.

* இருமல், தும்மல் ஏற்படும் போது, கைக்குட்டையால் மூக்கை, வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

* வெளியிடங்களில் எச்சில் துப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.

எச்1என்1 வைரஸ் நோய் தடுப்பு மருந்து உள்ளது. ஊசி வகை, மூக்கில் ஸ்பிரே போட்டுக் கொள்ளும் வகை ஆகியன உள்ளன. 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு, மூக்கு வழியே ஸ்பிரே செய்யலாம். 6 மாதக் குழந்தைகளுக்கு ஊசி மருந்தே போட வேண்டும். இரண்டுமே, சிறந்த வகைகள் தான்.

மூக்கு வழியே போடப்படும் தடுப்பு மருந்தால், பயன்கள் அதிகம். மூக்கில் உள்ள சளியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகளும் அழிய வாய்ப்பு ஏற்படும். தடுப்பு மருந்து போட்டாலும், சிலருக்கு தொற்று ஏற்படலாம். ஆனால், அது குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த தொற்று, ஏப்ரல் மாதம் வரை தென்படும். எனவே, நோய் தடுப்பு மருந்து போட்டுக் கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Saturday, October 23, 2010

மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயில் உருவாக்கபடுகுறது



மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயில் என்ஜினை சீன என்ஜினீயர்கள் உருவாக்கி வருகிறார்கள். அதி வேக ரெயில் கட்டுமானத்தில் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்க நாங்கள் விரும்புகிறோம் என்று ரெயில்வே அமைச்சரக தலைமை என்ஜினீயர் ஹெ ஹூவாவூ தெரிவித்தார். மணிக்கு 394.3 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயிலை பீஜிங்குக்கும், டியான்ஜின் நகருக்கும் இடையே சீனா அறிமுகப்படுத்தி 2008-ம் ஆண்டு ஜுன் 24-ந் தேதி சீனா உலக சாதனை படைத்தது.


கடந்த மாதம் மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயிலை ஷாங்காய் -ஹாங்க்ஷூ நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தி சாதனை படைத்தது.
இப்போது மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயில் என்ஜினை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள். கடந்த மாதம் செப்டம்பர் மாத நிலவரப்படி சீனாவில் 7 ஆயிரம் கி.மீ. நீளத்துக்கு அதிவேக ரெயில்பாதைகள் உருவாக்கப்பட்டது. இந்த நிலவரம் 2012-ம் ஆண்டு இரு மடங்காக அதிகரிக்கப்படும்.

Tuesday, October 19, 2010

கூகுளின் செயற்கை அறிவாண்மை


[ செவ்வாய்க்கிழமை, 12 ஒக்ரோபர் 2010, 02:09.55 பி.ப GMT ]

கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது.

சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை ( Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.

காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது.
இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன.

இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது.
கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இக்கார்களுக்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sunday, October 17, 2010

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5




இன்றைய நிலவரப்படி புதிய செல்போன் வாங்க நினைப்பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, 3 ஜி வசதி இருக்கிறதா என்பதுதான். அத்துடன் ஜிபிஎஸ், வைஃபை, க்வெர்டி கீபோர்டு போன்ற தொழில்நுட்பங்களும் கிடைக்குமா என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் விலையைக் கேட்டபிறகு பாதிபேர் பின்வாங்கிவிடுகின்றனர். நோக்கியாவின் 2 புதிய வெளியீடுகள் இந்த நிலைமையை மாற்றியிருக்கின்றன. அதில் ஒன்று C5 மற்றொன்று E5.

3ஜியின் முக்கிய வசதியே இணையப் பயன்பாடுதான். சி5 மற்றும் இ5 ஆகிய இரண்டு மாடல்களும் 10.2 எம்பிபிஎஸ் வேகம் வரை இணையத் தொடர்பை அளிக்கின்றன. சேவை அளிப்பவர்கள் அந்த வேகத்தில் இணைப்பை வழங்க வேண்டும் அவ்வளவுதான். சி5ல் வைஃபை வசதி கிடையாது. இ5-ல் இந்த வசதி இருக்கிறது.

இதில் சி5 மிகவும் எளிமையான வழக்கமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இ5 மிகவும் நவீனமான க்வெர்டி கீபோர்டு வசதியுடன் வந்திருக்கிறது. இதில் இ5-ல் விடியோ கால் கேமரா கிடையாது. ஆனால், வேறுபல வசதிகள் இ5-ல் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சி5-ல் 128 எம்பி ராம் மெமரியும் இ5-ல் 256 எம்பி ராம் மெமரியும் உள்ளன. இந்த வசதியால் இந்த இரு போன்களுமே மிக வேகமாகச் செயல்படுகின்றன. அதேபோல் சி5-ல் 50 எம்பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் இ5-ல் 250 எம்.பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளன. கூடுதலாக 2 ஜிபி மெமரி கார்டு வழங்கப்படுகிறது. சி5யில் 3.2 மெகாபிக்சல் கேமராவும் இ5-ல் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன.

சி5 ஸ்கீரின் 16 மில்லியன் வண்ணத்திறனும் இ5 ஸ்கிரீன் 256கே வண்ணத்திறனும் கொண்டிருக்கின்றன. இ5-ல் குறைந்த வண்ணத்திறன இருப்பதால் பெரிதாக வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.

இரு போன்களிலுமே ஜிபிஎஸ் வசதி இருக்கிறது. ஏபிஜிபிஎஸ் சேவையும் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் கூகுள் லாட்டிட்யூட் சேவை இரு போன்களிலுமே மிக அருமையாகச் செயல்படுகிறது.

செல்லும் இடங்களிலெல்லாம் இணைத்தை மேய நினைப்போருக்கு இ5 போனும், விடியோ கால் வசதி கண்டிப்பாக வேண்டும் என நினைப்போருக்கு சி5 போனும் சிறந்தது.

அமெரிக்காவில் பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு : விஞ்ஞானிகள் நூதன திட்டம்

அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் விஷ பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இவை அங்குள்ள வனப்பகுதியில் மரங்களில் சர்வ சாதாரண மாக உலா வருகின்றன. மக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக அவை திகழ்கின்றன.

அவை ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு வாகனங்களில் ஊடுருவி வந்துள்ளன. இதனால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் பாம்புகளின் தீராத தொல்லை இங்கு அதிகரித்துள்ளது.

எனவே அங்குள்ள விஷ பாம்புகளை கொல்ல அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகள் நூதன திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எலி என்றால் பாம்புகளுக்கு கொள்ளை பிரியம்.

அவற்றை விழுங்கி உணவாக்கி கொள்ளும். எனவே எலிகளின் உடலில் “அசிடோமினாபென்” என்ற விஷ மருந்தை செலுத்தி காட்டுக்குள் உலவ விட்டால் அவற்றை சாப்பிடும் பாம்பு களை செத்து மடியும் என்று கருதினர்.

அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் குவாம் தீவில் உள்ள 20 ஏக்கர் வனப்பகுதியில் 200 எலிகளை ஹெலிகாப்டர் மூலம் வீசினர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

எனவே இதே திட்டத்தை பெருமளவில் செயல்படுத்த உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட விஷ எலிகள் வீசப்பட உள்ளன. இதன் மூலம் அங்குள்ள விஷ பாம்புகளின் எண் ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்புத் துறைக்கு வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்

இசை, ஆல்பம் என கோலோச்சி வந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒருபடத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் இங்கு அல்ல....மலையாளத்தில்

ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான். இந்தப் படத்தில் மம்முட்டி, ஜெயசூர்யா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தில் துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டனர்.

ஒரே நாள் ஷூட்டிங்கில் உங்களது படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தயாரிப்பாளர்கள் உறுதியளித்தவுடன் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் ரஹ்மான்.

விரைவில் இசைப்புயலை படத்திலும் பார்க்கலாம்.

Saturday, October 9, 2010

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன..!


கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை அதாவது 10 ஆண்டுகளாக கடல்வாழ் உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்பும், ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில், 10 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான கடல் வாழ் உயிரினங்கள் பூமியில் வாழ்வது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மைக்ராஸ் கோப்பிக் உயிரினங்கள் அடங்காது. ஆனால் 5 ஆயிரம் வகை புதிய உயிரினங்கள் இதில் அடங்கும்.

தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் புதிய வகை நண்டுகள் உள்ளன. இவை “கிவிடேக்” என்ற புதிய குடும்ப வகையை சேர்ந்தவை. இவற்றுக்கு “கிவா” வன விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இவை ஈஸ்டர் தீவுகளின் தென்புறத்தில் உள்ளன.

இவை தவிர பிளைண்டு லாப்ஸ்டார், ஆக்டோபஸ் தோற்றம் கொண்ட ஹிப் போலைட் கேடாகிராபர் போன்றவையும் அடங்கும். இவை பெரிய காது போன்ற செதில்களின் மூலம் தண்ணீ ரில் நீந்துகின்றன.

மேலும் புழு வகைகள், நத்தை வகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் 80 சதவீதத்துக்கும் மேல் ஆஸ்திரேலியா விலும், 70 சதவீதம் ஜப்பான், 75 சதவீதம் மத்திய தரைக்கடலின் ஆழ் பகுதி யிலும், 58 சதவீதம் அண்டார் டிகாவிலும், 38 சதவீதம் தெற்கு ஆப்பிரிக்காவிலும், 10 சதவீதம் ஐரோப்பா கடல் பகுதியிலும் வாழ்கின்றன.


ஆய்வில் 80 நாடுகளைச் சேர்ந்த 640 நிறுவனங்களும், 2700 விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இதற்காக கடலில் 9 ஆயிரம் நாட்கள் தங்கி இருந்தனர். 10 ஆயிரம் மீட்டர் ஆழ்கடலிலும் தங்கள் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்.