Search

Saturday, October 9, 2010

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன..!


கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை அதாவது 10 ஆண்டுகளாக கடல்வாழ் உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்பும், ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில், 10 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான கடல் வாழ் உயிரினங்கள் பூமியில் வாழ்வது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மைக்ராஸ் கோப்பிக் உயிரினங்கள் அடங்காது. ஆனால் 5 ஆயிரம் வகை புதிய உயிரினங்கள் இதில் அடங்கும்.

தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் புதிய வகை நண்டுகள் உள்ளன. இவை “கிவிடேக்” என்ற புதிய குடும்ப வகையை சேர்ந்தவை. இவற்றுக்கு “கிவா” வன விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இவை ஈஸ்டர் தீவுகளின் தென்புறத்தில் உள்ளன.

இவை தவிர பிளைண்டு லாப்ஸ்டார், ஆக்டோபஸ் தோற்றம் கொண்ட ஹிப் போலைட் கேடாகிராபர் போன்றவையும் அடங்கும். இவை பெரிய காது போன்ற செதில்களின் மூலம் தண்ணீ ரில் நீந்துகின்றன.

மேலும் புழு வகைகள், நத்தை வகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் 80 சதவீதத்துக்கும் மேல் ஆஸ்திரேலியா விலும், 70 சதவீதம் ஜப்பான், 75 சதவீதம் மத்திய தரைக்கடலின் ஆழ் பகுதி யிலும், 58 சதவீதம் அண்டார் டிகாவிலும், 38 சதவீதம் தெற்கு ஆப்பிரிக்காவிலும், 10 சதவீதம் ஐரோப்பா கடல் பகுதியிலும் வாழ்கின்றன.


ஆய்வில் 80 நாடுகளைச் சேர்ந்த 640 நிறுவனங்களும், 2700 விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இதற்காக கடலில் 9 ஆயிரம் நாட்கள் தங்கி இருந்தனர். 10 ஆயிரம் மீட்டர் ஆழ்கடலிலும் தங்கள் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்.

No comments:

Post a Comment