Search

Sunday, October 17, 2010

நடிப்புத் துறைக்கு வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்

இசை, ஆல்பம் என கோலோச்சி வந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒருபடத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் இங்கு அல்ல....மலையாளத்தில்

ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான். இந்தப் படத்தில் மம்முட்டி, ஜெயசூர்யா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தில் துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டனர்.

ஒரே நாள் ஷூட்டிங்கில் உங்களது படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தயாரிப்பாளர்கள் உறுதியளித்தவுடன் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் ரஹ்மான்.

விரைவில் இசைப்புயலை படத்திலும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment