காதலித்துப்பார்...!
இருண்ட உன் உலகம்
ஒளிபெறும்.
ஒளிர்ந்த உன் உள்ளம்
இருளாகிவிடும்.
இருளில் மறையும்
நிழலாய் உன்
உயிருக்குள் ஒரு விம்பம்
ஒழிந்து விடும்.
உருகி வழியும் பனிப்பாறையாய்
உன் வெட்கம்
கரைந்து விடும்.
தொலைவும் உனக்கு
அண்மையாகும்...!
கண்ணாடிக்கு முன்னால் உன்
நிமிடங்கள் கரையும்.
நாட்கள் நீளும்..ஒவ்வொரு நிமிடமும்
உனக்கு ஒரு நாளைப்போல்
தெரியும்.
தென்றல் மோதியே
உன் தேகம் காயப்படும். இருந்தும்
புயலைக்கண்டும் அஞ்சாது
உன் இதயம்.
உன்னவளை(ன)க் காணும் போது
உன்னையே
மறந்து விடுவாய்.
மலரையே ரசிக்காத நீ
உலகையே ரசிப்பாய்.
கடல் கூட உனக்கு ஆழமில்லை
உன் காதலைவிட.
உன் எதிரியைக்கூட
நண்பனாய் நினைப்பாய்.
தனிமையே உனக்கு துணையாகும்.
அவளைத்தேடியே
உன்னைத் தொலைத்து விடுவாய்.
உனக்குள்ளும் எழும் கவிதை.
காதலித்துப்பார்...!
Fahath Ahmed
No comments:
Post a Comment