Search

Saturday, January 23, 2010

என் நிகழ்காலக் காதல்.

வானம்
மழைக்கரம் நீட்டி
பூமியைத் தொடுகிறது.

நிலவு
மேகக் கூட்டங்களுடன்
போராடுகிறது.

இருள் போர்வைக்குள்
உலகம் உறங்குகிறது.

காற்று மலர்களை
நடுங்கச்செய்கிறது.

இவ்விரவில்...
உன் நினைவுகள் என்
இதயக்காகிதத்தில் எழுதுகிறது
காதல் கவிதைகள்.

உன் நினைவுகளுடன்...

உன்னை நினைக்கும் போது
என் ஒவ்வொரு
இரவுகளும் பௌர்ணமி..!

உன்னுடன் பேசும் போது
ஒவ்வொரு
வார்த்தைகளும் கவிதைகள்.!

உன் பார்வைக் கதிர்கள்
என்னுள்
ஊடுருவிச்சென்று என்
இதயத்துக்குள் உருவாகின்றது
காதல் வானவில்..!

உன் அழகான உருவம்
என் கண்களில்
நுழைந்து இதயத்தினுள்
நிழற்படமாய் விழுந்து உயிருக்குள்
உருவாகிறது ஒரு
உண்மைக்காதல்..

Fahath Ahmed

No comments:

Post a Comment