Search

Sunday, July 27, 2014

இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீத்தான சகோதரியின் வயிற்றிலிருந்து குழந்தை மீட்பு

 
இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா., அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் ஒருபுறம் வலியுறுத்தினாலும் தாக்குதல் நின்றபாடில்லை. 

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வரும் ஹமாஸ் போராளிகளை அழிக்க காசா மீது இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழித் தாக்குதலும் நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக வெஸ்ட் பேங்க் பகுதியில் போராட்டம் மற்றும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்ரேல் போலீசாருடன் மோதலில் ஈடுபடுவதால் அவர்களிலும் பலர் கொல்லப்படுகின்றனர். 

இந்நிலையில், 18-வது நாளான இன்று 25-07-2014 இஸ்ரேல் ராணுவம் பல்வேறு பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தியது. ரபாவில் நடந்த தாக்குதலில் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் மூத்த தலைவர் சலாஹ் ஹசானென், அவரது 12 வயது மற்றும் 15 வயது மகன்கள் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள டெயிட் அல்-பலாஹ் நகரில் நடந்த தாக்குதலில் 23 வயது கர்ப்பிணி பலியானார். ஆனால், ஆபரேசன் செய்து அவரது வயிற்றில் உள்ள குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். 

இதன்மூலம் காசாவில் மரண எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 8-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு 5240 பேர் காயமடைந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது 3 ஏவுகணைகளை வீசி தாக்கியதாக போராளிகள் தெரிவித்துள்ளனர்.

போராளிக்குழுவின் முக்கிய கமாண்டர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

Sunday, July 20, 2014

இப்படியும் ஒரு சோகம்..!

மார்ச் மாதம் காணாமல் போன மலேசிய விமானத்தில் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை இழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் தனது வளர்ப்பு மகள் மற்றும் அவரது கணவரை இழந்துள்ளார்.

வாழ்க்கையில் பலருக்கும் பல வகையில் சோகங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், ஒருவருக்கு ஒரே ஏர்லைன்ஸ் மூலமாக இப்படி ஒரு மோசமான நிலை ஏற்படுமா என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

ஆனால், பல நேரங்களில் நிஜம் கற்பனைகளை விட மோசமாக இருந்து விடுவதுண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலேன் மன் என்ற பெண்ணின் சகோதரர் ரோட் பர்ரோஸ் அவரது மனைவி மேரி பர்ரோஸ் இருவரும் கடந்த மார்ச் மாதம் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்கள்.

அவர்களை இழந்த சோகத்தில் இருந்து கைலேன் மன் இன்னும் விடுபடாத நிலையில், வியாழக்கிழமை இரவு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசின் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது வளர்ப்பு மகள் மரீ ரிஸ்க் அவரது கணவர் - ஆல்பர்ட் ஆகியோரை இழந்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களை விமான விபத்தில் இழந்துள்ள கைலேன் மன் மற்றும் அவரது சகோதரர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.