Search

Saturday, August 27, 2011

தன்கையே தன் கண்ணை குத்தலாமா?

கிழக்கு மாகாணமே இலங்கை முஸ்லிம்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற அளவுக்குஅதிக முஸ்லிம்களைக் கொண்டுள்ள மாவட்டமாக திகழ்கின்றது. இந்த மாகாண சபையில் இரண்டு அமைச்சர;கள், தவிசாளர; ஆகியோர் எம்மினத்தவர்களாக இருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வந்தோம். ஆனால் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்த முஸ்லிம் கல்விப் பணிப்பாளரை மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு முஸ்லிம் அல்லாத ஒருவரைக் கொண்டு வந்திருப்பது தான் இந்த புனிதநோன்பு காலத்தில் மிகவும் வேதனையை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

இந்த முஸ்லிம் அமைச்சர;களுக்கும், தவிசாளருக்கும் நிசாமை பிடிக்க வில்லை என்றால் மாற்றத்தான் வேண்டுமென்றாலும் அந்த இடத்திற்கு இன்னொரு முஸ்லிமைக் கொண்டு வந்திருக்க வேண்டுமென்பது தான் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். இன்று கிழக்கு மாகாணக் கல்விப் பகுதியில் முடிவு எடுக்கின்ற தரத்தில் எந்தவொரு முஸ்லிமும் இல்லை என்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இத்தனைக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளராக்கக் கூடிய தகுதியுள்ள இன்னும் சில முஸ்லிம்கள் இதே மாகாணத்தில் இருக்கும் போது தான் இந்த நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் 20 திணைக்களங்கள் செயற்படுகின்றன. இவற்றில் 13க்கு தமிழர;களும், 5க்கு சிங்களவர்களும், 2க்கு மட்டுமே முஸ்லிம்களும் பொறுப்பாக உள்ளனர;. 3ஆக இருந்த ஒரு முஸ்லிம் குறைக்கப்பட்டு 12 ஆக இருந்த தமிழ் 13 ஆக உயர;த்தப்பட்டுள்ளது. இது நமது பிரதிநிதிகளின் கெட்டித்தனமா? நமது மாகாணத்தின் முஸ்லிம் விகிதாசாரத்தையும் நமக்கு கிடைத்துள்ள அதிகாரிகளின் அளவையும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.

இந்த நிலையில் இந்த பிரதிநிதிகள் சார;ந்துள்ள தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன எப்படி நமது உரிமைகள் பற்றி கவனம் செலுத்தும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

எனவே, இப்படி தூர சிந்தனை இல்லாமல் செயற்படும் நமது பிரதிநிதிகளுக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்க இந்த ரமழான் மாதத்தில் பிரார்த்தனை புரிவோமாக.

Wednesday, August 10, 2011

திருமணம் சுமையல்ல, சுகமே!


நண்பர்கள் யாராவது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாலே ஐயோ பாவம் என்ற ரீதியில்தான் அதனை வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே உள்ளது. திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே காததூரம் ஓடுபவர்கள்தான் இருக்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது பழமொழி அதனை போற்றி பாதுகாப்பது அனைவரின் கடமை. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வு தெரியவந்துள்ளது

திருமணத்தின் அவசியம்

மனித வாழ்க்கையில் திருமணம் எந்த அளவிற்கு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமணத்தின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுவது போல மனோரீதியாகவும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

WHO-வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அதில் 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்…

பறந்துபோகும் மனச்சோர்வு

இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது. அதிலும் பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.

தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.