Search

Wednesday, February 16, 2011

சீன திருவிழாவில் 100 கோடி குறுந்தகவல்கள் அனுப்பி சாதனை

சீனாவில் கொண்டாடப்பட்ட திருவிழாவான இலைதுளிர் காலத் திருவிழாவில் சீன கைத்தொலைபேசி நிறுவனங்கள் தலா ஒரு கோடி

குறுந்தகவல்களை அனுப்பி சாதனை படைத்துள்ளன. சீனாவின் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுவது இலைதுளிர்கால விழாவாகும். இந்த விழாவை யொட்டி சீன மக்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துச் செய்திகளை தங்களின் கைத்தொலைபேசியில் இருந்து குறுந்தகவல் மூலம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதன்படி அனுப்பப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 100 கோடியை தாண்டியிருக்கக் கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பீஜிங் நகரில் மட்டும் சுமார் 143 மில்லியன் குறுந்தகவல்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ஒரு வினாடிக்கு 4 ஆயிரத்து 700 என்ற விகிதத்தில் அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஷாங்காய் மாகாணத்தில் மட்டும் திருவிழா தினத்தன்று 920 மில்லியன் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை குவாங்டாங் மாகாணத்தை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். ஆண்டு தோறும் குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்புவோரின் எண்ணிக்கை 23 சத வீதம் அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment