உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.
1.மாரடைப்பு (Coronary heart disease)
2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)
3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)
4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)
5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)
6.HIV/AIDS
7.காச நோய் (Tuberculosis)
8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)
9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)
10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)
இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல்
Search
Thursday, June 17, 2010
Sunday, June 6, 2010
கடலுக்குள் ஆய்வு நிலையம்!
நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின் சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய (அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.
நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை பூமி, நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்திலோ ஈர்ப்பு விசை 8-ல் முன்று பங்காக இருக்கிறது. இதுதவிர சூரிய ஔ பற்றாக்குறை, தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு போன்றவையும் காணப்படுகிறது. எனவே செவ்வாய் பயணம், நிலவுப் பயணத்தைவிட சவாலானது. இதை எதிர்கொள்ளும் விதமாக செவ்வாய்க்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பல்வேறுவித ஆய்வு, ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றில் ஒரு சில சோதனைகள் முடிந்துவிட்டன.
அடுத்தகட்ட சோதனையாக விண்வெளி வீரர்களை கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக கடலில் 65 அடி ஆழத்தில் புளோரிடா மாகாணத்தில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நாசாவின் இந்த திட்டம் நீமோ (NEEMO – நாசா எக்ஸ்டிரிம் என்விரான்மென்ட் மிஷன் ஆபரேஷன்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.
சவால் நிறைந்த, சிக்கலான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சிகள் இதன் முலம் அளிக்கப்படுகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அஸ்ட்ராநட்ஸ் (Astronauts) என்று அழைப்பதுபோல கடலுக்குள் தங்கி இருந்து ஆய்வு நடத்தும் வீரர்களை அக்வாநட்ஸ் (Aquanauts) என்று அழைக்கிறார்கள்.
இந்த சோதனையில் அனுபவம்மிக்க 2 விண்வெளி வீரர்கள் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொள்கிறார்கள். 2 வார ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற செயற்கை சூழ்நிலையில் ஸ்பேஸ்வாக் செய்வது, எந்திரங்களை இயக்குவது போன்ற பணிகளை வீரர்கள் செய்கிறார்கள். இந்த முன்கட்ட ஆய்வு, விண்வெளி வீரர்களின் உடல்தகுதியை அதிகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை
ஃபேஸ்புக்பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது.
லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.
இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது.
அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அதைக் கிளிக் செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ் எச்சரித்துள்ளது.
உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி ஃபேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.
6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

ஆபத்தான விமான நிலையங்கள் எத்தனை?
சென்னை : மங்களூரு விமான விபத்துக்கு அங்கு அமைந் துள்ள விமான நிலையத் தின் அமைப்புதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அதைப் போல சிக்கலான அமைப்புள்ள விமான நிலையங்கள் இந்தியாவில் பல உள்ளன.மங்களூரு பாஜ்பே விமான நிலையம், "டேபிள் டாப்' விமான நிலையம் என்று அழைக் கப்படுகிறது.
ஓடுபாதை தரையிலிருந்து உயரமாக, அல்லது மலைப்பாங்கான பகுதியில் அமைந்திருந்தால் இவ்விதம் அழைக்கப்படும். இதன் பழைய ஓடுபாதை, 6,000 அடி நீளமும், புதிய ஓடுபாதை, 8,300 அடி நீளமும் கொண் டவை.மங்களூரு போல், காஷ் மீரின் லே மற்றும் ஸ்ரீ நகர், கேரளாவின் கோழிக் கோடு, பக்தோக்ரா, அகர் தலா, கவுகாத்தி, சில்சர், லெங்புய், போர்ட் பிளேர், குலு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைந் துள்ள சில விமான நிலையங்கள், சிக்கலான அமைப்பில் தான் அமைந் துள்ளன.விமான நிலையம் மேட்டுப்பாங்கான பகுதியில் அமைந்திருந்தால் அதில் ஒரே திசையில் மட் டும் விமானத்தை இறக்க வேண்டி வரும்.அதே போல், பிற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைந்திருந்தால், அந்நாடுகளின் மீது பறப் பது, எப்போதுமே பிரச்னைக்குரியதாகத்தான் இருக்கும்.
இந்த இரண்டுக்கும் உதாரணமாக அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் விமான நிலையம் உள்ளது. இங்கு ஒரே திசையில் மட்டும் தான் விமானத்தை இறக்க முடியும். காரணம் அதைச் சுற்றி அமைந்துள்ள மலைகள்.அதேபோல் கேரளா, கோழிக்கோட்டிலுள்ள விமான நிலையத்தைச் சுற்றிலும் மலைகள் அமைந்திருப்பதால், வானிலை சரியாக இல் லாத காலங்களில் அங்கு விமானத்தை இயக்குவது, சிக்கலான விஷயம் தான். அதையும் விட, ஓடுபாதையின் விளிம்பில், ஒரு பெரிய பள்ளத்தாக்கும் இருக்கிறது.
இதுபோன்ற சிக்கல் நிறைந்த விமான நிலையங்கள் குறித்து அனுபவம் வாய்ந்த விமானிகள் கூறியதாவது:ஓடுபாதைகளைப் பொறுத்தவரை பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பில்லாதது என்று கூற இயலாது. ஆனால் அதை, தெளிவானது அல்லது சிக்கலானது என்று கூறலாம். பாதுகாப்பும், பாதுகாப் பின்மையும், பறப்பதிலும், ஓடுபாதையின் தரத்திலும் தான் இருக்கிறது.மலைப்பாங்கான விமான நிலையங்களில் மட்டுமே விபத்துக்கள் நிகழ்வது என்பது தவறு. சாதாரணமான பிற நிலையங்களிலும் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.அப்படிப் பார்த்தால், அனைத்து ராணுவ விமான நிலையங்களுமே சிக்கல் வாய்ந்தவைதான். பெரும் பான்மையும் அவற்றின் ஓடுபாதை குறுகிய தூரம் கொண்டவையாகவும், சிக்கலான நில அமைப்பில் அமைந்தவையாகவும் தான் இருக்கும்.ஒரு காலத்தில் சிக்கல் வாய்ந்ததாகக் கருதப்பட்ட கொச்சி விமான நிலையம், இன்று அவ்வாறு கருதப்படுவதில்லை. அகர்தலா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், வங்கதேசத்தின் மீதுதான் பறந்தாக வேண்டும் என்ற சிக்கலான நிலை, இன்னும் நீடிக்கிறது.பக்தோக்ரா விமான நிலையத்தின் ஓடுபாதை, ஒன்பதாயிரம் அடி நீளம் கொண்டது. அது, நேபாளம் மற்றும் வங்கதேச எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு மிகக் கவனமாகத் தான் தரையிறக்க வேண் டும்.நாட்டின் மிக உயர்ந்த விமான நிலையம், காஷ்மீரின், லே. அது கடல் மட் டத்திலிருந்து 10 ஆயிரத்து 682 அடி உயரத்தில் இருக்கிறது.
அங்குள்ள சிக்கல், விமானிகளுக்கு மட்டுமல்ல, விமானத்துக்கும் சேர்த்தே உள்ளது. அவ் வளவு உயரத்தில் விமானத்தை இறக்கிப் புறப்படுவது, சாதாரண காரியமல்ல.லே ஓடுபாதையில் விமானி ஏதாவது தவறு செய்து விட்டால், அவர் இதர விமானிகளுக்கெல் லாம் எடுத்துக்காட்டாகி விடுவார். அதாவது அங்கு கரணம் தப்பினால், மரணம் என்ற நிலை தான்.பொதுவாக ஓடுபாதையைக் குற்றம் சொல்ல முடியாது. அதே நேரம், விமானி விமானத்தை இரண்டு முறை மேலே எடுக்கவோ, கீழே இறக்கவோ இயலாது. தனியார் விமான நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, பாதுகாப்பு விதிகளை அரசு,நீர்த்துப் போகச் செய்து விட்டது. 2005 வரை, ஒருவிமானி, வர்த்தக விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெறுவதற்கு, அவர், 250 மணி நேரம் பறந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது அது, 200 மணியாகக் குறைக்கப்பட்டு விட்டது.
இந்திய விமானிகள், வர்த்தக விமான உரிமத்தைப் பெறுவதற்கு முன்பு, பயணிகள் விமான இயக்க அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த விதி வேறு எந்த நாட்டிலும் கிடையாது.ராணுவ விமானத்தை விட பயணிகள் விமானம் சிக்கலான அமைப்புடையது. ராணுவ விமானத்தை இயக்கிய வெளிநாட்டு விமானிகளில் பலர், இங்கு வந்து பயணிகள் விமானத்தை இயக்குகின்றனர்.இவ்வாறு விமானிகள் தெரிவித்தனர்.

Thursday, June 3, 2010
Subscribe to:
Comments (Atom)