Search

Tuesday, January 22, 2013

பெர்முடா முக்கோணம்[The Bermuda Triangle] - உண்மையும் , கட்டு கதையும் !!!

நீங்கள் ஒரு வரைபடத்தில்  இதைக்  காண முடியாது என்றாலும், பெர்முடா முக்கோணம்  உண்மையாகவே உள்ளதுகடந்த காலத்தில் நிறைய  கப்பல்கள், விமானங்கள் மற்றும் மக்கள் பலரும் காணமால் போய்  உள்ளனர். பல சம்பவங்களுக்கு நம்பும்படியான விளக்கம் இருந்தாலும் , அங்கு நடந்த பல  சம்பவங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இன்று வரை எந்த அறிவியல்ரீதியான விளக்கமும் இல்லை !

பெர்முடா முக்கோணம் மியாமி, போர்டோ ரிகோ மற்றும் பெர்முடாஸ்  இடையே புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் 500 000 சதுர மைல்களை  உள்ளடக்கியது. பெர்முடா முக்கோணத்தை, சாத்தானின் முக்கோணம் என்று கூட அழைப்பர் , ஏனெனில் பெர்முடாவை முற்காலத்தில் சாத்தானின் தீவு என்று அழைத்தனர் !
 
 
தீவை சுற்றிலும் பவளபாறைகள் அமைந்துள்ளதால் , பல நூற்றாண்டு காலமாக அந்த கடல் வழியை மிகவும் ஆபத்தானதாக கருதினர்  கப்பலோட்டிகளும், மாலுமிகளும். பெர்முடா முக்கோணம் பற்றிய  அசாதாரண நிகழ்வுகள் கிறிஸ்டோபர் கொலம்பஸ்  காலத்தில் இருந்து உள்ளது . அவர் சில நேரங்களில் திசைகாட்டி தாறுமாறாக சுற்றியது  என்று தனது அறிக்கையில் கூறி உள்ளார். பல பத்திரிகையாளர்கள் இந்த  பகுதியில்  நடந்த விபத்துக்கள் அனைத்தும்  அசாதாரண விஷயங்கள்   என்று நிரூபிக்க முயற்சி செய்து தோற்றனர் . சில சம்வத்தில் எந்த விதமான துப்பும் கிடைக்காமல் கூட போனது !

நன்கறியப்பட்ட சம்பவங்களில்  ஒன்று  அமெரிக்க கடற்படை பயிற்சி விமானம்  பிளைட் 19 காணாமல் போனது !. டிசம்பர், 1945 , ஐந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் வழக்கமான பயணத்தை ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் இருந்து தொடங்கியது. பல வானொலி செய்திகளை அனுப்பிய  பின்னர் , அந்த விமானத்தில் இருந்த 14 குழு உறுப்பினர்களும்  விமானத்தோடு காணாமல் போயினர். அந்த விமானத்தை தேடி சென்ற இன்னொரு மீட்பு விமானமும் காணமல் போனது !

என்ன தவறு  நடந்தது என்று முழுமையாக தெரியவில்லை.திசைகாட்டிகள் தவறான திசைகளை காட்டியது மற்றும் தெரிவுநிலை மோசமாக இருந்தது, அதனால் விமான ஓட்டி கீழே தெரியும் அடையாளங்களை வைத்து விமானத்தை செலுத்த முயற்சி செய்தார் என்பது மட்டுமே தெரியும் !

பின்னர் ஒரு திடீர் புயயலினால் வானொலி தொடர்பு இல்லாமல் போனது கப்பல்கள் இந்த பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போயுள்ளன. மேரி செலஸ்டி, ஒரு அமெரிக்க வணிக கப்பல், 1872 ஆம் ஆண்டில் காணாமல் போனது . அந்த கப்பல் நியூயார்க்கில் இருந்து ஜெனோவாவை நோக்கி சென்று கொண்டிருத்த போது அது மாயமானது . ஆனால் பின்னர் அந்த கப்பல் , எந்த குழு உறுப்பினர்களும்  இல்லாமல் ஆப்ரிக்கா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது . மேரி செலஸ்டி கப்பல் பெர்முடா முக்கோணத்தில் பயணித்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் , அந்த கப்பலின் பணிக்குழு என்ன ஆனது என்பது இன்று வரை புரியாத புதிரே !

ஏன் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போகின்றன என்பதற்கு  பல கோட்பாடுகள் மற்றும் காரணங்கள் கூறப்படுகின்றன சிலர் கூறுகின்ற காரணமானது , மிகவும் பலம் வாய்ந்த மின்காந்த புலன் [Magnetic Field] . அழிந்து போன அட்லாண்டிஸ் என்னும் தீவு தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று பலர் வாதிடுகின்றனர் !. பெர்முடா முக்கோண கடலில் பலவகையான ரசாயனம் உள்ளது என்றும் , அதனால்தான் இவ்வளவு பிரச்னை என்று சில சாரார் வாதிடுகின்றனர் !

கரீபிய கடல் மிகவும் ஆபத்தானது என்றும் , அங்கு சீதோசன நிலை ஒரே மாதிரி இருப்பது  கிடையாது என்றும் , கடல் மட்டம் ஒரே மாதிரி இருபது இல்லை என்றும் , திடீர் என்று பல பகுதிகளில் தாழ்வான தரைமட்டம் வரும் என்றும் . இது போன்ற பல காரணங்களை முன் வைக்கின்றனர் !!!

இந்த 20ஆம்  நூற்றாண்டில் மட்டும்  சுமார் 1000 பேருக்கு மேல் பெர்முடா முக்கோணத்தில் மறைந்து போகினர் !

பெர்முடா முக்கோணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் , சம்பவங்களுக்கும் , அறிவியில்ரீதியான விளக்கம் கண்டிப்பாக இருக்கும் என்று அனைத்து விஞ்ஞானிகளும் கூறி கொண்டிருந்தாலும் , இன்று வரை அது ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!


 

கோபத்தில் வெளியிடப்படும் வார்த்தைகள் உயிரை கூட எளிதாக எடுத்துவிடும் !!!

ஒரு ராணுவ வீரன் தனக்கு திருமணமான உடன் பட்டாளத்துக்கு சென்று விட்டான். அவன் சென்ற சில மாதங்களிலே அவன் தந்தையான விவரம் தெரிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பத்து வருடங்கள் கழிந்து அவன் சொந்த ஊருக்கு திரும்பி வந்த போது அவனது மனைவி மிகுந்த ஆர்வத்துடன் அவனை வரவேற்றாள். அன்னையின் பின்னே சற்றே மிரண்ட விழிகளுடன் ஒரு சிறுவன் நின்றிருந்தான். தன் மகன் என்று உரிமையோடும் பெருமையோடும் அவனை பார்த்து கொண்டிருக்கும் போது அவன் தந்தையை கண்டு கொள்ளவே இல்லை.

அவன் மனைவி அங்கிருந்து அகன்றதும் சிறுவன் வந்து வீரனிடம், நீங்கள் யார் என்று வினவினான். சற்றே அதிர்ச்சியடைந்தாலும், வேடிக்கை போல், கண்ணா நான் தான் உன் அப்பா என்றான் அவன். உடனே சிறுவன் கூறினான், இல்லை நீங்கள் இல்லை என் தந்தை. என் அப்பா எப்போதும் என் அம்மா கூடவே இருப்பார். அவள் நடந்தால் நடப்பார், அமர்ந்தால் அமர்வார் என்றான். வீரன் திகைத்து போய் விட்டான். சற்று நேரம் கழித்து வந்த மனைவியை வெறித்து நோக்கினான். பின்பு, அவன் அவளிடம் முகம் கொடுத்து...