விருதுநகரில் நடந்த விபத்தில் பலியானவரிடம், மொபைல் போன் மற்றும் 42 ஆயிரம் ரூபாயை திருடிய போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., ராமசாமியை சஸ்பெண்ட் செய்து பிரபாகரன் எஸ்.பி., உத்தரவிட்டார்.
சாத்தூர் மேலநட்டம்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன், கடந்த பிப்., 22ல், ஓசூரிலிருந்து மாருதி வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். காலை 5.45 மணிக்கு விருதுநகர் ஆயுதப்படை மைதானம் எதிரே கார் மீது வேன் மோதியதில், பாண்டியராஜன் பலியானார்.
இத்தகவல் போலீசாரின் மைக்கில் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., ராமசாமி, சம்பவ இடத்திற்கு சென்றார். பலியான பாண்டியராஜனிடமிருந்து மொபைல் போன், 42 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார்.
அதன்பின் அங்கு சென்ற சூலக்கரை எஸ்.ஐ., செல்வராஜ் விபத்து குறித்து விசாரணை நடத்தினார். பலியானவர் உடலை விருதுநகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
பாண்டியராஜன் உறவினர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, "விபத்தின் போது மொபைல் போன், 42 ஆயிரம் ரூபாய் காணமல் போனதாக,' விருதுநகர் எஸ்.பி., பிரபாகரனிடம் மனு கொடுத்தார்.
அவர் இது தொடர்பாக விசாரிக்க, டி.எஸ்.பி., பிச்சைக்கு உத்தரவிட்டார். மொபைலின் ஐ.எம்.ஏ., நம்பர் மூலம் மொபைல் போனை கிருஷ்ணமூர்த்தி தொடர்பு கொண்ட போது, அதை ராமசாமி எஸ்.எஸ். ஐ,, பயன் படுத்தி வந்தது தெரிய வந்தது.
இவரது தகவல்படி, பிரபாகரன் எஸ்.பி.,யும் விசாரித்த போது, இறந்தவரிடம் திருடியதை எஸ்.எஸ். ஐ,, ராமசாமி ஒப்புக்கொண்டார். அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., பிரபாகரன் உத்தரவிட்டார்.