Search

Tuesday, January 4, 2011

ஒரு தலை ராகம்...


கடலில் விழுந்த ஓற்றை
மழைத்துளியாய்
உனக்குள் என்னைத தொலைத்து விட்டு
சூரிய வெளிச்சத்தில்
மங்கிப்போன நிலவைப்போல்
உயிர் வாழ்கிறேன்.

நீ இருக்கும் கனவுகள் கூட
எனக்கு வெகு தொலைவில்.
என் மன வெளியில் உன் கால்தடம்
பதித்துச் சென்றாய் சுகமாக.

தொலைவினில் நின்று நீ அறியாமல்
உன்னைப்பார்த்து
எனக்குள் உன் உருவத்தினை
நிறுத்திக்கொள்வேன்.

நீ இல்லை என்று சொன்ன
பிறகும்
வானம் பொழிவதும் தெரியாமல்
சூரியனின்
அனல் வெயிலையும் பார்க்காது
உன் வருகைக்காக
சாலையெங்கும் தவம் கிடப்பேன்.
தொலைபேசியில் உன் குரலை
மட்டுமே கேட்டு
எனக்குள் காதல் வளர்த்தேன்.
என் குரல் கேட்டால்
அழைப்பை துண்டிப்பயென்று
மறுமுனையில்
மௌனமாக நீ "ஹலோ" சொல்லும்
அழகை ரசிப்பேன்.

ஒவ்வொரு நொடியும்
உன் நினைவுச்சாரலில்
நனைந்து என் உயிரில்
எழதி வைத்தேன் உன் பெயரை.
காதலின் தலைஎழுத்தால் ஒருதலையாய்
உன் நினைவுகளுடன்..